அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு எனக்கு முன் உண்டான சமுதாயத்தை சார்ந்தவர்கள் அவர்களின் நபியை புகழ்ந்ததை போல என்னை புகழ வேண்டாம் என்று நபியவர்கள் கூறிய ஹதீஸை வைத்து சிலர் நபியை புகழக்கூடாது என்று கதறுகின்றனர் .
இந்த ஹதீஸின் மூலம் இரு விசயங்களை கவனிக்க வேண்டும்
1. நபியவர்கள் என்னை புகழவே கூடாது என்று கூறவில்லை நபியவர்களுக்கு தெரியும் நபியவர்கள் மீது நேசம் கொண்ட உண்மை மூமின்கள் அவர்களால் நபியவர்களை புகழாமல் இருக்க முடியாது என்பது நபியவர்களுக்கு தெரியும் அதனால் புகழுங்கள் ஆனால் முன் உண்டான சமுதாயம் புகழ்ந்த அளவிற்கு புகழாதீர்கள் என்று கூறினார்கள்
2. யகூதிகளும் நசராக்களும் தங்களின் நபியை இறைவனாக ஆக்கி விட்டார்கள் ஆனால் இப்போது நபியை புகழும் யாரும் நபியவர்களை இறைவன் என்று சொல்ல மாட்டார்கள்
இவர்கள் நம்மிடம் ஒரு கேள்வி கேட்பார்கள்
பிறகு ஏன் அன்த கப்பாருள் கதாயா நபியே எங்களின் பாவங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்கிறீர்கள், மன்னிப்பது இறைவனின் குணமில்லையா? என்று அறிவு ?? சார்ந்த ஒரு கேள்வியை கேட்பார்கள்
வல்லாஹு முஹ்தி அனல் காசிம்
அல்லாஹு கொடுக்கிறான் நான் பங்கு வைக்கிறேன் என்று நபியவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் எதை உணவை மட்டுமா கொடுக்கிறான் ?
நபியவர்கள் உணவை மட்டுமா பங்கு வைக்கிறார்கள் ?
உலகில் ஒரு மனிதனுக்கு அனைத்தையும் பங்கு வைப்பது நபியவர்கள்தான்
நமக்கு மன்னிப்பை பங்கு வைப்பதும் நபியவர்கள்தான்
அப்படிப்பட்ட நபியவர்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது ?
எனவே சப்தமாக ஓதுங்கள்
அன்த கப்பாருள் கதாயா
No comments:
Post a Comment