அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அறிவு-மனிதனுக்காக அல்லாஹ் கொடுத்த அற்புதம். இந்த அற்புதத்தைக் கொண்டுதான் மனிதன் இன்று விஞ்ஞான உலகில் பல்வேறு சாதனைகளைச் சாதித்துள்ளான். குறிப்பாக இன்றைய மேலைநாட்டவர்கள் அறிவியல் உலகில் கொடிகட்டிப் பறக்கின்றனர். இந்த அறிவியல் உலக முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இதைத்தான் ராபர்ட் ப்ரிஃபால்ட் (Robert Briffault) என்ற மேலைநாட்டு அறிஞர் இப்படிக்குறிப்பிட்டார்:
“அரேபியர்களின் வானவியல் ஒரு கோபர்நிகஸையோ அல்லது நியோட்டனையோ உருவாக்கவில்லை. என்றாலும், அவர்களின் பங்களிப்பின்றி ஒரு கோபர்நிகஸோ அல்லது நியோட்டனோ பிறந்தே இருக்கமுடியாது.”
(மனித இனத்தை உருவாக்குதல், பக்கம் 295)
“வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்கு பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதனைக் கொண்டு பூமியை அது இற்ந்துபோன பின்னர்கூட உயிப்பித்து மேலும் அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.”
(அல்குர்ஆன் 2:164)
இந்த வசனம் இறங்கியபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா ) அவர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்கள்:
“எவர் ஒருவர் இந்த வசனத்தை ஓதிவிட்டு அதனைப் பற்றிய சிந்தனையில் ஈடுபடவில்லையோ அவருக்கு அழிவுதான்.”
ஆதாரம்: இப்னு ஹிப்பான்
ஐரோப்பாவிற்கு ஒளியூட்டிய முஸ்லிம்கள்...
அண்ணலெம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உருவாக்கிய தோழர்கள் பன்முகத்திறன் படைத்தவர்களாய் விளங்கினர். அவர்கள் ஒவ்வொரு துறை குறித்தும் ஆழமாகச் சிந்தித்து, சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்களாய்த் திகழ்ந்தனர். இறைத்தூதரின் மறைவுக்குப்பின் தொடர்ந்த கலீஃபாக்கள் (கி.பி.632-661), உமையாக்கள் (661-750) அப்பாசியாக்களின் (750-1258) ஆட்சிக்காலத்தில் விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் அரசியல் போன்ற துறைகள் வளர்ச்சியடைந்தது. அதிலும் குறிப்பாக அப்பாசியாக்களின் ஐந்து நூற்றாண்டு ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஆராய்ந்து ஏற்படுத்திச் சென்ற விஞ்ஞானத் தொழில்நுட்பத்தைத்தாம் இன்றைய ஐரோப்பா சுவீகரித்துக் கொண்டுள்ளது. இதைத்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்:
“ஐரோப்பா அன்று கல்வியில், விஞ்ஞானத்தில், கலையில், வாழ்வின் அடிப்படை வசதிகளில் பின்தங்கி இருந்தது. அரபு ஸ்பெயின்தான் அதிலும் குறிப்பாக அங்குள்ள கார் டோபா பல்கலைக்கழகம்தான் ஐரோப்பாவின் இருண்ட காலகட்டங்கள் முழுவதும் கல்வி அறிவுப் பேரார்வம் என்னும் ஒளிவிளக்கைத் தொடர்ந்து எரியச் செய்தது. அதனுடைய ஒளிக்கீற்றுகளில் சில ஐரோப்பாவை மூடியிருந்த இருளைக் கிழித்துச் சென்றன.”
‘இந்தியக் கண்டுபிடிப்புகள்’ என்ற நூலிலிருந்து.
விஞ்ஞானத்தில் ,மருத்துவத்தில் இஸ்லாமியர்கள் செய்த புரட்சியை பற்றி பார்ப்போம் அதில்,
1.அல்-ராஸி
இவர் எழுதிய மருத்துவ நூல்கள் அனைத்தும் லத்தீன் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
சின்னம்மை, பெரியம்மை இவற்றிற்கிடையேயான வேறுபாட்டையும் அந்நோய்க்கான காரணங்களையும் இவர்தான் முதன்முதலில் இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்தார். இந்நோயைப் பரப்பும் நச்சுக் கிருமிகளையும், ஒருமுறை பெரியம்மை வந்தால் மறுமுறை அந்நோய் வராது என்பதையும் கண்டறிந்தவர் இவரே.
No comments:
Post a Comment