அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு ஆலிம் மிக சிறப்பாக பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் .
அவரின் பிரசங்கம் முடிந்த பின் மக்கள் அவரிடத்தில் உங்கள் பிரசங்கம் அருமை, அற்புதம் என்று கூறி அவரை புகழ்ந்து அவரிடம் கைகொடுத்துக்கொண்டிருந்தனர் .
மக்கள் அவரை புகழ புகழ அவருக்கு பெருமை ,தலைக்கனம் அதிகமாகிக்கொண்டே இருந்தது .
நம்மை விட சிறந்த பேச்சாளர் யாருமில்லை என்று அவரின் மனதிற்குள் சிந்தனை வந்து வந்து சென்று கொண்டிருந்தது ...
நம்மை விட சிறந்த பேச்சாளர் யாருமில்லை என்று அவரின் மனதிற்குள் சிந்தனை வந்து வந்து சென்று கொண்டிருந்தது ...
இதை அனைத்தையும் இன்னொருவர் பார்த்துக்கொண்டே இருந்தார் .
மக்கள் அனைவரும் சென்ற பிறகு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதர் அந்த ஆலிமிடம் வந்து உங்கள் பிரசங்கம் அருமை என்று கைகுலுக்கினார் .
அந்த ஆலிம் மக்கள் எல்லோரும் என்னுடன் கைகுலுக்கும்போது நீயும் வராமல் எல்லோரும் சென்ற பின் வருகிறாய் இவ்வளவு நேரம் எங்கிருந்தாய் என கேட்டார் ..
அதற்க்கு இவ்வளவு நேரம் உங்களுடன்தான் இருந்தேன் என்றான் வேடிக்கை பார்த்தவன்.
அந்த ஆலிம் ஆச்சரியமாக என்னது எண்ணத்துடன் இருந்தாயா என்றார் ?
ஆம் உன்னுடன்தான் இருந்தேன் எப்போதெல்லாம் மக்கள் உன்னை புகழும்போது நான் சிறந்த பேச்சாளன் என்ற எண்ணம் உன்னிடம் வரும்போதெல்லாம் உன்னுடன்தான் இருந்தேன் ..
மக்கள் உன்னை புகழும் போது அந்த புகழை இறைவனின் பக்கம் சேர்க்காமல் உன் பக்கம் சேர்த்து நீ பெரிய அறிவாளி என நீ நினைக்கும்போதெல்லாம் உன்னுடன்தான் இருந்தேன் ..
நான்தான் ஷைத்தான் என்றான் ....
நம்முடனும் ஷைத்தானை நாம் அப்படிதான் வைத்திருக்கிறோம் மக்கள் நம்மை புகழும்போது இந்த மக்களை கொண்டு நம்மை புகழ வைத்தது இறைவன்தான் என்று சிந்திக்க மறுக்கும் நேரத்தில் ஷைத்தான் நம்முடன்தான் இருக்கிறான் ..
நமக்கு பேச்சாற்றலையோ எழுத்தாற்றலையோ கொடுத்தது இறைவன்தான் என சிந்திக்காத நேரத்தில் ஷைத்தான் நம்முடன்தான் இருக்கிறான் ..
ஷைத்தானின் குணம் எனக்கு அனைத்தும் தெரியும் என்று கூறுவது .
நபிமார்கள் ,பெரியோர்கள் நல்லோர்களின் குனம் எனக்கு எதுவும் தெரியாது என்ற சிந்தனையில் வாழ்வது .
எனவேதான் ஆதம் நபிக்கு ஸஜ்தா செய் என்று இறைவன் கூறியபோது பெருமையினால் ஷைத்தான் மறுத்தான்.
இக்ர ஓதுவீராக என்று நபியவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது நான் ஓத தெரிந்தவனில்லையே என தெரியாது என்பதிலிருந்து நபியவர்கள் ஆரம்பித்து நமக்கு கற்றுக்கொடுத்தார்கள் ..
தெரியாது என்ற சிந்தனையில் இருப்பவர்கள் அதிகமாக கற்றுக்கொள்ளலாம் ..
எனக்கு அனைத்தும் தெரியும் என்ற சிந்தனையில் இருப்பவரின் மனதில் எதுவும் நுழையாது ..
எனக்கு அனைத்தும் தெரியும் என்ற சிந்தனையில் இருப்பவரின் மனதில் எதுவும் நுழையாது ..
காரணம் காலி குடத்தில் மட்டுமே நீர் பிடிக்க முடியும் ....
No comments:
Post a Comment