Sunday, May 15, 2016

ஷஃபான் மாதத்தின் நோன்பு

* ரமலான் மாத நோன்பைத்தவிர மற்ற மாதங்களில் முழுமையாக நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததாக நான் கண்டதில்லை. மேலும் ஷஃபான் மாதத்தைவிட மற்ற மாதங்களில் அதிகமாக அவர்கள் நோன்பு வைத்ததாகவும் நான் கண்டதில்லை. (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
* நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து ஓ! இன்னவரே! ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தில் நீர் நோன்பு வைத்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்று பதில் கூறினார். இதைக் கேட்ட நபியவர்கள் நீ வைக்காது இருந்தால் இரண்டு நோன்பு வைத்துக் கொள்ளும் என்று பதில் சொன்னார்கள். (அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹூஸைன் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

* ஷஃபான் மாதத்தின் பாதி இரவு வந்து விட்டால் அந்த இரவில் வணங்கி பகலில் நோன்பு வையுங்கள். காரணம் வல்ல அல்லாஹ் அன்று சூரியன் மறைந்ததும் உலக வானத்தில் இறங்கி பாவமன்னிப்பு கேட்பவருண்டா ? அவரது பாவத்தை நான் மன்னிக்கிறேன். இரணத்தை தேடுபவருண்டா ? அவருக்கு இரணத்தை கொடுக்கிறேன். சோதனைக்கு ஆளாக்கப்பட்டவர் உண்டா ? அவருக்கு சுகத்தை கொடுக்கிறேன். வேறு என்னென்ன உண்டோ அதை கேட்பவர் உண்டா ? அதை கொடுக்கிறேன் என்று ஃபஜ்ரு உதயமாகும் வரை கேட்கிறான் என நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர் : அலி (ரலி) ஆதாரம் : இப்னுமாஜா)
* நபிகள் நாயகம் (ஸல்) என்னைப் பார்த்து இந்த இரவைப் பற்றி நீங்கள் அறிவீர்களா ? என வினவினார்கள். இதில் என்ன சிறப்பிருக்கிறது என நான் நபிகள் நாயகத்திடம் கேட்டேன். அப்போது இந்த இரவில்தான், இவ்வருடத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும், மரணமடைபவரின் எண்ணிக்கையும், அவர்களின் உணவும் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் நல்ல செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : பைஹகீ)
* நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் ஷஃபான் மாதம் 15-வது இரவில் இணை வைப்பவர்களைத் தவிர உள்ள எல்லா அடியார்களையும் இறைவன் மன்னிக்கிறான். (அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி) நூல் : இப்னுமாஜா – அஹ்மது)
* ஷஃபான் மாதம் 15-வது இரவில் நின்று வணங்குங்கள், பகலில் நோன்பு வையுங்கள். ஏனென்றால் இறைவன் சூரியன் மறைந்ததிலிருந்து கீழ்வானம் வெளுக்கும் வரை முதல் வானத்திலிருந்து எனது அடியார்களில், பிழை பொறுக்க வேண்டுவோர் உண்டா? கேட்கும் பிழை பொறுக்கப்படும். உணவு விருத்திக்கு வேண்டுவோர் உண்டா? கொடுக்கப்படும். நோய் குணமடைய வேண்டுவோர் உண்டா? நோய் நிவர்த்திக்கப்படும் எனக் கூறுகிறான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) நூல் : இப்னுமாஜா)
* ஒருநாள் இரவு தொழுத நபியவர்கள் நீண்டநேரம் சுஜூது செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இறந்து விட்டார்களோ என நினைத்த நான் எழுந்து சென்று அவர்களது பெருவிரலை அசைத்தேன். அது அசைந்தது. உடன் நான் திரும்பிவிட்டேன். அப்போது நாயகம் (ஸல்) சுஜூதில் சொன்ன துஆவை நான் கேட்டேன். இறைவா! உனது தண்டனையிலிருந்து உனது மன்னிப்பைக் கொண்டும், உனது கோபத்திலிருந்து உனது திருப்தியைக் கொண்டும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
உன்மீதுள்ள புகழை நான் வரையரை செய்யமுடியாது. நீ நப்ஸின்மீது புகழ்வதைப் போலவே இருக்கிறாய் என்ற பொருள் உள்ள துஆவை ஓதிவிட்டு தனது தொழுகையை முடித்த நபியவர்கள் ஆயிஷாவே! நான் உனக்கு துரோகம் செய்துவிட்டேன் என நினைத்து விட்டாயா என்று கேட்க இல்லையென்று கூறிய நான் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள், நீண்டநேரம் சுஜூது செய்து கொண்டிருந்ததால் இறந்துவிட்டீர்கள் என நினைத்தேன் என்று கூறினார்கள்.
இதைக்கேட்ட நபியவர்கள் ஆயிஷாவே! இது என்ன இரவு என்று உனக்கு தெரியுமா? இது ஷஃபான் மாதத்தின் பாதி இரவாகும். நிச்சயம் அல்லாஹ் இன்றைய இரவில் தனது அடியார்களிடம் தோன்றி பாவமன்னிப்பு தேடுபவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குகிறான். ரஹ்மத்தை தேடுகிறவர்களுக்கு ரஹ்மத்தை வழங்குகிறான். பொறாமைக்காரர்களுக்கு அவர்கள் எந்நிலையில் உள்ளார்களோ அதே நிலையில் (இவைகளை) பிற்படுத்துகிறான் என நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : பைஹகீ)

No comments:

Post a Comment