அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபிகள் நாயகத்தின் (ஸல்) மிக நெருங்கிய நண்பர் ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு மிகுந்த வயிற்று பசி ஏதாவது உணவு இருக்கிறதா? என மனைவியிடம் கேட்கிறார்கள் தண்ணீரை தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி... சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்...
பாதி வழியில் ஹஜ்ரத் உமர் (ரலி) எதிரே வருகிறார்கள்... என்னவென்று கேட்கிறார் ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி வீட்டில் தண்ணீரை தவிர உண்பதற்கு எதுவும் இல்லை எனவேதான் உங்களை பார்க்க வருகிறேன் என்கிறார்கள் ஹஜ்ரத் உமர் (ரலி) சரி என் வீட்டிலும் இதே நிலைதான் அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை சென்று பார்க்கலாம் என நபிகளாரின் வீட்டிற்கு செல்கின்றனர்...
எதிரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள்... அருமைத்தோழர்களின் நிலை அறிந்து வேதனையுடன் தனது வீட்டின் நிலையும் இதுதான் என்று சொல்லி என்ன செய்வது எங்கே செல்லலாம் என யோசித்து கொண்டிருக்கும்போது அபூ அய்யூப் அல் அன்ஸாரியின் வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்து மூவரும் செல்கின்றனர்
இவர்கள் மூவரும் வருவதை பார்த்த நபித்தோழர் அபூ அய்யூப் அல் அன்ஸாரி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று தனது இல்லத்தில் அமரவைத்து அவர்களுக்கு பேரீத்தம் பழங்களை கொடுத்து பரிமாறுகிறார்கள்...
கொஞ்சம் பேரீத்தம்பழங்களை தின்ற நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரியிடம் அபூ அய்யூப் அவர்களே நான் இவற்றில் இருந்து கொஞ்சம் பேரீத்தம் பழங்களை எடுத்து கொள்ளலாமா?என கேட்கிறார்கள்...
அதை கேட்ட நபித்தோழர் அபூ அய்யூப் ரலி அவர்கள் என்ன யா ரசூலல்லாஹ்! இப்படி கேட்கிறீர்கள்? உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்கிறார்... அதை கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்... இல்லை எனக்கு சிறிதளவு போதும், என் அருமை மகள் ஃபாத்திமா(ரலி) கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவே இல்லை என கூறுகிறார்கள்...
இதை கேட்ட உடனே தனது பணியாளர் ஒருவரிடம் அண்ணல் நபிகளின் வீட்டிற்கு பேரீத்தம்பழங்களை கொடுத்து அனுப்புகிறார்கள் அபூ அய்யூப் அல் அன்ஸாரி...
உலகம் போற்றும் உன்னத நபிகள் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு ஏழ்மையாக இருந்தது... அவர்கள் தங்கள் மகள் பாத்திமா(ரலி) மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டு...
# இறைவா எங்கள் வாழ்வில் எங்கள் பிள்ளைகளுக்கு உணவையும் மற்ற மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற அளவிற்கு எங்களுக்கு போதுமான செல்வத்தையும் ஆற்றலையும் தந்தருள்புரிவாயாக ரப்பில் ஆலமீனே....
No comments:
Post a Comment