பன்முக கலாச்சாரம் கொண்ட பல சமூகங்கள் வாழும் நாட்டை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆண்டால் அவர்களின் கலாச்சாரத்தில் கைவைக்க மாட்டார்கள்.
பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது கிருஸ்த்துவ மற்றும் யூதர்களுக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்த பத்திரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அதில் உமர் பைத்துல் முகத்தஸ்வாசிகளுக்கு எழுதியளித்த ஒப்பந்த வரிகள்:
’அவர்களுடைய உயிர்கள் உடைமைகள் அவர்களுடைய தேவாலயங்கள் மடாலயங்கள் அவர்களிலுள்ள நலமுள்ளவர்கள் நோயுள்ளவர்கள் அனைவருக்கும் அபயம் அளிக்கப்படும் “எலியா”வின் சமயத்தவர் அனைவருக்குமே! அவ்ர்களுடைய வழிபாட்டிடங்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களாக ஆக்கப்படமாட்டாது அவை தகர்க்கப்பட மாட்டாது. அவற்றின் கட்டுமானத்திலும் சுற்றுச் சுவர் களிலும் எத்தகைய மாறுதலும் மேற்கொள்ளப்பட மாட்டாது.அவர்களுடைய சிலுவைகளுக்கோ சொத்துக்கோ எவ்வித சேதமும் ஏற்படாது. சமய விவகாரங்களில் அவர்கள் வற்புறுத்தப்பட மாட்டார்கள்.அவர்கள் யாரும் தொல்லைப்படுத்தப்படவும் மாட்டார்கள்.-என்று உறுதிமொழி அளிக்கப்படுகின்றது. (நூல்:ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்)
கஃலீபாக்கள மாற்றுக் கலாச்சார விழா பண்டிகை எதிலும் மூக்கை நுழைக்கவில்லை சுதந்திரமளித்தார்கள் அதே சமயத்தில் இவர்கள் பங்கு கொள்ளவில்லை ஈமானிய உறுதியோடு விலகி நின்றார்கள் அவர்களின் மார்க்கம் அவர்களுக்கு நம்முடைய மார்க்கம் நமக்கு என்று.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”முஸ்லிமல்லாத குடிமகன் ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்துவிட்டாலோ- அவனது உரிமைகயைப் பறித்தாலோ அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ நான் மறுமைநாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக வாதாடுவேன் “(நூல்:அபூதாவூத்)
No comments:
Post a Comment