ஒருநாள் இமாம் ஜஃபர் சாதிக் ரஹ்மதுல்லாஹ் அவர்கள்
தம் மாணவர்களை நோக்கி, “நீங்கள் பயபக்தியுடவர்களாகவும், அமானிதத்தை பேணுபவர்களாகவும், மக்களுடன் நல்ல முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாக பேசக்கூடிய சன்மார்க்க பிரசாரகர்களாகவும் திகழுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு அவர்களின் மாணவர்கள் “சுருக்கமாக கூறினால் மக்களுடைய மனதை எவ்வாறு தொடுவது?” என்றுக் கேட்டார்கள்.
அதற்கு இமாம் அவர்கள், “ நீங்கள் இறை கட்டளைக்கு பணிந்து நேரிய வழியில் நடப்பின் நீங்கள் அதிகம் அதிகமாய் பேச வேண்டியதில்லை. உங்களின் செயல்களே பெரும் முழக்கம் செய்துவிடும்; அதுவே பெரும் பிரச்சாரமாகிவிடும்.
"செயல்கள் விரிவாக பேசும் போது சொற்கள் சொற்பம் போதும்”
என்று பதில் கூறினார்கள் .
No comments:
Post a Comment