Wednesday, March 8, 2017

உம்ரா செய்யும்போது ஓதப்பட வேண்டியவைகள்



நான் அல்லாஹ்விற்காக இந்த உம்ராவை நிறைவேற்றுகின்றேன் என மனதில் நிய்யத் வைத்தவராக
لَبَّيْكَ عُمْرَةً 
லெப்பைக உம்ரதன் எனக் கூறுவது.
நிய்யத் வைத்ததன்பின் தவாபை ஆரம்பிக்கும் வரை தல்பியா கூறவேண்டும்.
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ
தல்பியா : ' லெப்பைக்கல்லாஹும்ம லெப்பைக் - லெப்பைக்க லாஷரீக்க லக லெப்பைக் - இன்னல்ஹம்த வன்னிஃமத லக வல்முல்கு லாஷரீக லக
பொருள் : நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்துவிடடேன். நாயனே! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். நாயனே! உனக்கு நிகராக எவருமில்லை; உனக்கு இணையாக எதுவுமில்லை. உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். நிச்சயமாக புகழ், அருள், ஆட்சி அனைத்தும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.
மஸ்ஜிதுல் ஹராமுக்குல் நுழையும் போது வலது காலை முன்வைத்து பின்வரும் துஆக்களில் ஒன்றை ஓதுவது.
اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக (முஸ்லிம்).
பொருள் :  நாயனே! உன் அருள்வாயில்களைத் திறந்துவிடு.
أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
அஊதுபில்லாஹில் அழீமி வபி வஜ்ஹிஹில் கரீமி வசுல்தானிஹில் கதீமி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்.(அபூதாவுத்)
பொருள் : மகத்தான நாயனைக் கொண்டும், சங்கையான அவனது முகத்தைக் கொண்டும், பூர்வீக அவனது முழுமையான அதிகாரத்தைக் கொண்டும் ஷெய்த்தானின் தீங்கிலிருந்து தப்பித்துக்கொள்ள நான் பாதுகாவல் தேடுகின்றேன். (ஆதாரம்: அபூதாவூத்)
தவாபை ஆரம்பிக்கும்போது கூற வேண்டியது :
الله أكبر
அல்லாஹு அக்பர்
அல்லது
بسم الله الله أكبر
பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.
அல்லாஹ்வின் திருநாமத்தால் தவாபை ஆரம்பிக்கின்றேன். அல்லாஹ் மிகப் பெரியவன்.
ருக்னுல் யமானிக்கும் 'ஹஜருல் அஸ்வத் கல்லுக்கும் இடையே பின்வரும் துஆவை ஓதவேண்டும்:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதன் வபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்
தவாபை முடித்த பின் தொழும் தொழுகையில் ஓத வேண்டியவை :
தவாப் செய்து முடித்தவுடன் மகாம் இப்ராஹீமில் அல்லது சனக்கூட்டம் அதிகமாக இருப்பின் மஸ்ஜிதுல் ஹராமின் ஏதாவது ஒரு இடத்தில் நின்று 2 ரக்அத்கள் தொழ வேண்டும். முதலாவது ரக்அத்தில் பாத்திஹா ஸூராவையும், குல்யா அய்யுஹல் காபிருனையும் இரண்டாவது ரக்அத்தில் பாத்திஹா ஸூராவையும், குல்குவல்லாஹு அஹதையும் ஓத வேண்டும்.
ஸஃயி செய்வதற்காக ஸபாஃ மலையில் ஏறும்போது ஒத வேண்டிய அல்குர்ஆன் வசனம்:
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللَّهِ
இன்னஸ் ஸபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்
பொருள் : நிச்சயமாக ஸபா, மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன.
أَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ
பொருள் : அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக்கொண்டு நானும் ஆரம்பிக்கின்றேன் எனக்கூறுவது.
இவைகள் முதல் சுற்றில் மாத்திரம் ஓதப்படவேண்டும்.
மேலும், கிப்லாவை முன்னோக்கிய நிலையில்
الله أكبر الله أكبر الله أكبر
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كَلِّ شَىْءٍ قَدِيرٌ
 لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ
அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிகலஹு லஹுல் முல்கு வலகுல் ஹம்து வஹுவ அலாகுல்லிஷையின் கதீர 
லாயிலாக இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஹ்தா, வனஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா என்று 3 முறை ஓதவேண்டும்.
அல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹ் மிகப்பெரியவன்.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியும், புகழும் அவனுக்கே உரியது. அவன் யாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அல்லாஹ் தனது வாக்கை நிறைவேற்றி அவன் தனது அடியார் நபிகளார் (ஸல்) அவர்களுக்கு வெற்றியை அளித்தான். அவன் தனித்தவனாக தனது எதிரிப் படைகளைத் தோற்கடித்தான்.
கஃபாவை முன்னோக்கிப் பிரார்த்திப்பது.
மர்வாவிலும் கஃபாவை முன்னோக்கி இந்த திக்ருகளை மூன்று முறை கூறிக்கொள்வது, இன்றும் பிரார்த்திப்பது.......
நன்றி : இஸ்லாமிய ஹதீஸ் பக்கம்

No comments:

Post a Comment