Thursday, May 25, 2017

ஸூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு


அபூ ஹுரைரா ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஸூரத்துல் பாத்திஹாவை ஜிபரீல் அலைஹிஸ்ஸலாம் மூலம் அல்லாஹ்தஆலா நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கி அருளியபோது, இப்லீஸ் மிகக்கடுமையாக கவலை தோய்ந்து அழ ஆரம்பித்து விட்டான். அவனின் அழுகை நிலை கண்டு அவனின் பிள்ளைகள் தந்தையே! உன்னை இந்த அளவுக்கு கவலையிலும், துன்பத்திலும் ஆழ்த்தியது எது? என்று வினவினர்.
அப்போது இப்லீஸ் " நிச்சயமாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தவர்கள் மீது மன்னிப்பும், மகத்துவமும் மிக்க ஸூரத்துல் பாத்திஹாவை அல்லாஹ் இறக்கி விட்டான் இதனால் அவர்கள் மன்னிப்புப் பெற்று பரிசுத்தமடைந்து விடுவார்களே என்று எண்ணி துக்கத்தில் அழுகின்றேன்" என்று கூறினான்.


நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் " எனது உயிர் யாரிடம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக ஸூரத்துல் பாத்திஹா போன்ற ஒரு அத்தியாயத்தை தௌராத் வேதத்திலோ , இன்ஜீல் வேதத்திலோ, சபூர் வேதத்திலோ காண முடியாது என்று கூறினார்கள். இந்த ஸூரத்துல் பாத்திஹாவை தொழுகையின் ஒவ்வொரு ரக்ஆத்திலும் ஓத வேண்டும் என்று உள்ளதே இதன் தனிச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் இது பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் " திருக்குர்ஆனின் தாயான இதை எவர் ஓதாமல் தொழுதாரோ அவரின் தொழுகை பூரணத்துவம் பெறாது" என்று கூறினார்கள். அது மட்டுமன்றி ஸூரத்துல் பாத்திஹா நோய் தீர்க்கும் அரு மருந்தென்றும் குறிப்பிடுகின்றார்கள்.  

No comments:

Post a Comment