Monday, May 8, 2017

இந்திய பிரதமர்க்கு வழிகாட்டிய பச்சை தமிழர் காமராஜர்

இந்திய பிரதமர்க்கு வழிகாட்டிய பச்சை தமிழர் காமராஜர்
பொற்காலம் அன்று 
பிரதமர் நேருக்கு என்னென்ன சிக்கல்கள், தொந்தரவுகள் வந்தாலும் அதைத் தீரத்தில் காமராஜர் முதல் மனிதராக இருந்தார்.
எதேச்சையாகக் காரிய கமிட்டி கூட்டத்துக்காக டெல்லி சென்ற அவர் , நேரு முகத்தை பார்த்த போது பெரும் சோர்வு தென்பட்டதை கவனித்து " உடம்புக்கு சரியில்லையா ?" என்றார். காமராஜரின் கேள்விக்கு பதில் சொல்லும் மனநிலையில் இல்லாத நேரு " இல்ல சரியாக தூங்காததால் ஏற்ப்பட்ட சோர்வு " என்றார். ஆனால், காமராஜர் விடாமல் கேட்டவே வேறு வழி இன்றி நேரு பேசினார். 
எந்த நாட்டுடனும் ராணுவ உடன்பாடு கொள்வதில் நேருக்கு விருப்பம் இல்லை. அணிசேரா நாடுகள் ஓன்று சேர்ந்து போரைத் தவிர்க்க வேண்டும் என்று நேருவின் உயர்ந்த எண்ணம். ஆனால் அப்போதைய ராணுவ தளபதி நேருவின் கருத்திற்கு எதிர்க் கருத்துக் கொண்டிருந்தார்.. தனது கொள்கையை நிலை நிறுத்த எதையும் செய்ய தயாராக இருந்தார். "ராணுவ புரட்சி செய்யவும் தயாராக இருப்பதாக தெரிகிறது " என்றார் நேரு.
நேரு சொன்னதை கேட்டதும் கொஞ்சவும் யோசிக்காத காமராஜர் " அதனால் என்ன ? ராணுவ தளபதியை மூணுமாசம் வெளிநாடு சுற்றுப்பயணம் அனுப்பவும்" என்றார்.
"வெளிநாட்டுக்கு அனுப்பினா, இப்போதைக்கு பிரச்சினை தீரும். ஆனா , அவர் வந்த பின்னரும் இதே பிரச்சினை மீண்டும் வரத்தானே செய்யும் ?"
அதற்க்கு பாமரன் படிக்காத மேதை அமைதியாக "அவருக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்புங்கள். அவர் திருப்பி வருவதற்குள் முப்படைகளையும் தனித்தனியே பிரித்து தனித்தனி தளபதிகளை நியமித்து விடுங்கள் என்றார் சிவகாமியின் செல்வர்.
தலைவர் இப்படி சொன்னது தான் தாமதம் . ஆசியாவின் ஜோதி முகத்தில் பிரகாசம் ஏற்ப்பட்டது . " இந்த யோசனை எனக்குத் தோன்றவே இல்லையே ..!" என்று காமராஜரைக் கட்டி தழுவினார். தன்னுடைய பிரச்சினைக்கு நல்ல தீர்வு தந்த காமராஜரை அன்று முதல் உற்ற நண்பராக ஏற்று கொண்டார்.
காமராஜருக்கு எப்படியாவது தனது நன்றியைத் தெரிவிக்க ஆசைப்பட்ட நேரு தனது பங்களாவில் ஆசை ஆசையாக வளர்த்த புலிக்குட்டியை காமராஜருக்கு பரிசாக வழங்கினார்.
காமராஜரும் மறுக்காமல் வாங்கி கொண்டார் . ஆனால் சொந்த உறவுகளே தனக்கு பாரம் என்று நினைப்பவர் ஆயிற்றே காமராஜர். அந்த புலிக்குட்டியை சென்னைக்கூட கொண்டு வராமல் டெல்லி மிருகக்காட்சி சாலைக்கு தனது பரிசாக கொடுத்து விட்டார் கர்மாவீரர். 🌹படிக்காத🌹 மேதை 🌹படிக்கும்🌹போதே பிடித்தது🌹

No comments:

Post a Comment