எகிப்தியருக்கு நடந்த உண்மை சம்பவம்:
எகிப்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் இருதய வலி காரணமாக வைத்தியரிடம் சென்ற வேளை, 'உங்களுடைய இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களில் அதிகமான அடைப்புகள் காணப்படுகின்றன" என்று வைத்தியர் கூறினார். அதற்கு அந்த மனிதர், 'உங்களுக்கு அதை ஆபரேஷன் பண்ண முடியுமா" என்று கேட்டார். அதற்கு வைத்தியர், 'இதனை ஆபரேஷன் பண்ணுவது மிகவும் கடினமாகும். இன்னும் அது மிகவும் ஆபத்தானதுமாகும். உங்களுக்கு இருக்கும் சிறந்த தீர்வு ஜெர்மன் நாட்டுக்கு சென்று அங்கே இந்த ஆபரேஷனை செய்வதாகும்' என்று கூறினார்.
ஜெர்மன் நாட்டுக்கு சென்ற அந்த மனிதர், அங்குள்ள வைத்தியரை சந்தித்தார். அவரை பரிசோதித்த அந்த வைத்தியர், 'உங்களுக்கு மிகவும் ஆபத்தான ஒரு ஆபரேஷனையே நாங்கள் செய்ய வேண்டி இருக்கின்றது. உங்களுடைய உயிர்வாழும் சாத்தியம் 50/50 தான்' என்று கூறினார். இதனை கேட்ட எகிப்தியருக்கு, தன் வாழ்நாளின் கடைசி நாட்கள் நெருங்கி இருப்பது தெளிவாகியது. அவர் வைத்தியரை பார்த்து, 'நான் என் நாட்டுக்கு சென்று எனது குடும்பத்தையும் நண்பர்களையும் சந்தித்து வர இரண்டு நாட்கள் தர முடியுமா? ஏனனில், நான் ஜெர்மனியில் மரணிக்கும் முன்னர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு பிரியாவிடை பெற வேண்டும்" என்றார். அதற்கு வைத்தியர், 'நிங்கள் சென்று வாருங்கள். ஆனால், நேரம் தாழ்த்தாமல் உடனடியாக திரும்பி விடுங்கள்; உங்கள் நிலைமை வர வர மோசமாகிறது" என்று கூறினார்.
தனது குடும்பத்தையும் நண்பர்களையும் சந்திக்க நாடு சென்ற அந்த மனிதர், வீதியில் நடந்து செல்லும் பொது, ஒரு இறைச்சி கடையை கண்டார். அந்த கடைக்கு அருகில், கிழே விழும் இறைச்சி எலும்புகளை ஒரு பெண்மணி பொருக்கி கொண்டிருந்தாள். அவளிடம் அவர் , 'ஏன் இவ்வாறு செய்கிறாய்' என்று கேட்டார். அதற்கு அப்பெண்மணி, 'நான் என் மகள்மாருக்கு இவற்றை எடுக்கிறேன்' என்று கூறினாள். 'ஏன்' என்று அவர் கேட்க, 'என்னிடம் வசதி இல்லை. எனது மகள்மார் இரண்டு வருடங்களாக மாமிசம் சாப்பிட்டதில்லை. இந்த எலும்புகளையே நாம் சாப்பிடுகிறோம்' என்று அவள் பதில் அளித்தால். அதற்கு அந்த மனிதர் இறைச்சிக்கடை காரரை பார்த்து, 'இந்த பெண்மணி ஒவ்வொரு கிழமையும் உங்களிடம் வருவாள். அவளுக்கும் அவளின் மகள்மாருக்கும் போதியளவு இறைச்சியை நிங்கள் வழங்குங்கள். ஒருவருடத்துக்குரிய பணத்தை இப்போதே நான் தருகிறேன்' என்றார். இதனை பர்த்த அந்த பெண்மணி துஆ செய்ய தொடங்கினாள். 'யா அல்லாஹ், அவருக்கு நற்சுகத்தை கொடுப்பாயாக; யா அல்லாஹ், அவருக்கு மகிழ்ச்சி தரும் எல்லாவற்றையும் கொடுப்பாயாக, யா அல்லாஹ், அவரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வாயாக' என்று மனமாற பிரார்த்தித்தாள்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் வீடு சென்ற அவரை பார்த்து அவரின் மகள், 'என் தந்தையே, உங்களின் முகம் மாறி இருக்கின்றது, உங்களின் முகத்தில் பெரிய ஒரு வித்தியாசம் தெரிகிறது' என்று கூறினாள். அதற்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ், ஜெர்மனியில் எனது ஆபரேஷனை அல்லாஹு தஆலா இலகுவாக்குவனாக' என்று பிரார்த்தித்தார்.
பின்னர் ஜெர்மனி சென்ற அவர், ஆபரேஷனுக்கு முன்னர் கடைசி பரிசோதனை செய்ய வைத்தியரிடம் சென்றார். அங்கிருந்த வைத்தியர், 'எந்த வைத்தியசாலைக்கு நீங்கள் சென்றிருந்தீர்கள்?' என்று வினவினார். 'ஒரு வைத்தியசாலைக்கும் நான் செல்லவில்லை' என்று அவர் பதிலளிக்க, 'இல்லை, நீங்கள் எதாவது ஒரு சக்திவாய்ந்த மருந்தை உட்கொண்டதினால், உங்களின் அடைபட்ட எல்லா இரத்த குழாய்களும் திரந்துகொண்டுள்ளன. இதற்கு பிறகு உங்களுக்கு ஆபரேஷன் ஏதும் தேவையில்லை' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், 'இதனை யார் குணப்படுத்தியது என்று எனக்கு தெரியும். அல்லாஹு தஆலாவே என்னை குணப்படுத்தினான். நான் இன்னொரு கஷ்டவாளியின் தேவைக்கு உதவி செய்ததால், அவன் எனக்கு சுகத்தை தந்து உதவி செய்தான்' என்று கூறினார்.
🔆 சதகாவின் காரணமாக ஒருபோதும் செல்வம் அழியாது. யார் மற்றவரை மன்னிப்பாரோ, அல்லாஹ் அவரின் கண்ணியத்தை உயர்த்துவான். யார் அல்லாஹு தஆலாவுக்காக வேண்டி தன்னை தாழ்த்தி கொள்கிறாரோ, அல்லாஹ் அவரின் அந்தந்ஸ்தை உயர்த்துவான்.
நன்றி : உமர் முக்தர்
No comments:
Post a Comment