Saturday, July 29, 2017

நின்றுகொண்டு நீர் அருந்த தடை

1400 வருடம் முன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னது இன்று ஆய்வு சொல்லும் அறிவியல் பூர்வ உண்மை.!!!
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.  நூல் : முஸ்லிம்.4117
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். நூல் : முஸ்லிம் 4118
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்'' என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?'' என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது'' என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.
நூல் முஸ்லிம் 4116.
'பதிவிட்டவர்
மக்கா அப்துல் காதர்!,28/07/2017

No comments:

Post a Comment