அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கண்மணி நாயகம் நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாராவது வந்து காப்பாற்றமாட்டார்களா? என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல் கப்ரில் மையித் தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து துஆவை பிராத்தனையை எதிர்பார்க்கின்றது.
அப்படி ஏதேனும் ஒரு துஆ அந்த மையித்தைச் சென்றடைந்தால் அதை துன்யா மற்றும் அதிலுள்ளவற்றை விட மிகப் பிரியமாக கருதுகிறது. நிச்சயமாக அல்லாஹ் உலக மக்களின் பிராத்தனை மூலம் கப்று வாசிகளுக்கு மலைகள் போன்று அருள்களை நுழைவிக்கின்றான். இறந்தவர்களுக்காக பிழை பொறுக்கத்தேடுவது உயிரோடிருப்போர் மரணித்தவர்களுக்கு வழங்குகின்ற சன்மானமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்கள் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.
ஆதாரம் : பைஹகீ, ஹதீஸ் இலக்கம்– 7904, மிஸ்காத்,ஹதீஸ் இலக்கம்– 2355, பக்கம் – 206, பாடம் – பாபுல் இஸ்திஃபார்)
குறிப்பு : "அல்ஹம்துலில்லாஹ்" நமது துஆ வில் பெற்றோருக்காக ஒவ்வொரு தொழுகையிலும் துஆ செய்வோம்.
No comments:
Post a Comment