Wednesday, July 5, 2017

நீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது

நீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் பிள்ளைக்கும் சிறந்தது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் தனது திருமறையில் கூறியிருப்பது திருகுர்ஆன் இறைவேதம் என்பதற்கு மாபெரும் சான்றாகும்.
"பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார்.
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்".  திருக்குர்ஆன் 19:23.24

பிரசவ வலியில் துடிப்பதற்கும், கீழே நீரூற்றை ஏற்படுத்துவதற்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருப்பதை இன்றைய அறிவியல் உலகம் கண்டு பிடித்து குர் ஆன் இறைவனின் வார்த்தை என்பதை மேலும் மெய்பித்திருக்கிறது.
பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இந்தியா விலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தை தரும் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தை வயிற்றில் கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் கூடுகிறது.
ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.

No comments:

Post a Comment