சூரா ஹூத்:
سنن الدارمي (4/ 2142)
عَنْ كَعْبٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اقْرَءُوا سُورَةَ هُودٍ يَوْمَ الْجُمُعَةِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் வெள்ளிக் கிழமையில் சூரா ஹூதை ஓதிக்கொள்ளுங்கள் .
இந்த ஹதீஸ் ஸுனன் தாரிமியில் பதியப்பட்டுள்ளது,
சூரா கஹ்ப்
ألا أخبركم بسورة ملأت عظمتها ما بين السماء و الأرض ؟ و لقارئها من الأجر مثل ذلك، و من قرأها غفر له ما بينه و بين الجمعة الأخرى، وزيادة ثلاثة أيام ؟ قالوا : بلى قال : سورة الكهف
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானம் பூமிக்கிடைப்பட்டதை தன் சிறப்பால் நிரப்பிவிடும் ஒரு சூராவை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா! அதனை ஓதுபவருக்கு அது போன்ற கூலியும் உண்டு, யார் அதனை ஓதுகின்றாரோ அவருக்கு இரு ஜும்ஆக்களுக்கிடையில் (ஏழு நாட்களினதும்) மேலும் மூன்று நாட்களினதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.! நபித்தோழர்கள் சொல்லித் தாருங்கள் என்று கூற வே, சூரதுல் கஹ்ப் என்று நபியவர்கள் கூறினார்கள்.
இதனை தைலமீ அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
சூரா யாஸீன்:
سنن الترمذي ت بشار (5/ 12)
عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَقَلْبُ القُرْآنِ يس، وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّهُ لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَةَ القُرْآنِ عَشْرَ مَرَّاتٍ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொன்றுக்கும் இதையம் இருக்கின்றது, அழ குர் ஆனின் இதையம் யாசீனாகும், யார் அதனை ஓதுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து விடுத்தம் குர் ஆன் ஓதிய நன்மையை எழுதுகின்றான்.
இந்த செய்தி திர்மிதீ, தாரிமீ, அல்பஸ்ஸார் போன்ற இடங்களில் பதியப்பட்டுள்ளது.
عن أنس بن مالك مرفوعا من دخل المقابر فقرأ سورة ( يّس ) خفف عنهم يومئذ ، وكان له بعدد من فيها حسنات
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது மைய வாடிக்குள் நுழைந்து, யாசீன் சூரவை ஓதினால் அன்றைய நாளில் கப்ராளிகளுக்கு தண்டனை இலேசாக்கப்படும். ஓதியவருக்கு மையவாடியில் உள்ளோரின் எண்ணிக்கையளவில் நன்மையையும் கிடைக்கும்.
இந்த செய்தியை இமாம் சஃலபி அவர்கள் தனது தப்ஸீரில் பதிந்துள்ளார்கள்.
عن أبي الدرداء وأبي ذر رفعه (ما من ميت يموت، فيقرأ عنده سورة (يس) ؛ إلا هون الله عز وجل عليه
யாராவது மரணித்து அவருக்கு பக்கத்தில் யாசீன் சூரா ஓ தப்படுமாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் தண்டனையை இலேசாக்குகின்றான்.
தைலமீ அவர்கள் முஸ்னதுல் பிர்தொவ்சில் பதிந்துள்ளார்.
عَن معقل بن يسَار الْمُزنِيّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ (يس)ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ تَعَالَى غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنبه فاقرؤوها عِنْدَ مَوْتَاكُمْ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
யார் அல்லாஹ்வின் திரு முகத்தை நாடி யாசீன் சூரவை ஓதுகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும், எனவே அதனை உங்களில் மரணத்தருவாயில் உள்ளவரிடம் ஓதுங்கள்.
இதனை பைஹகீ அவர்கள் ஷுஅபுல் ஈமானில் பதிந்துள்ளார், அபூதாவுத், இப்னுஹிப்பான், நசாஇயின் அமலுள் யவ்மி வல்லைலா , போன்ற கிதாபுகளில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது;
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: “اقرؤوا على موتاكم يس
عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ يس فِي صَدْرِ النَّهَارِ، قُضِيَتْ حَوَائِجُهُ
யார் யாசீன் சூரவை பகல் நேரத்தில் ஓதுகின்றாரோ அவரது தேவைகள் பூர்த்தியாக்கப்படும்.
இது ஸுனன் தாரிமியில் பதியப்பட்டுள்ளது.
عن أبي هريرة من قرأ سورة (يس) في ليلة الجمعة؛ غفر له
யார் யாசீன் சூராவை வெள்ளிக்கிழமை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு மன்னிப்பளிக்கப்படும்.
இதனை அஸ்பஹாணி அவர்கள் தர்கீபுத் தர்கீபிலும், இப்னுஸ் ஸுன்னி அவர்கள் அல்யவ்ம் வல்லைலா என்ற கிதாபிலும் பதிந்துள்ளனர்.
சூரா துகான்
شعب الإيمان (4/ 104)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَرَأَ سُورَةَ الدُّخَانِ فِي لَيْلَةِ جُمُعَةٍ أَصْبَحَ مَغْفُورًا لَهُ
யார் சூரா துகானை வெள்ளிக் கிழமை இரவியில் ஓதுகின்றாரோ அவருக்கு மன்னிப்பளிக்கப்படும்.
இந்த ஹதீஸ் ஷுஅபுல் ஈமான், இப்னுஸ்ஸுன்னீ போன்ற கிதாப்களில் பதியப்பட்டுள்ளது.
سنن الترمذي ت بشار (5/ 13)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةٍ أَصْبَحَ يَسْتَغْفِرُ لَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ.
யார் சூரா துகானை ஒரு இரவியில் ஓதுகின்றாரோ அவருக்காக எழுபது ஆயிரம் மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.
இது திர்மிதீ, ஷுஅபுல் ஈமான் போன்ற கிதாபகளில் பதியப்பட்டுள்ளது. இதே செய்தி சில வார்த்தை வித்தியாசங்களுடன் “யார் அதனை ஓதி தொழுகின்றாரோ” இப்னு அதீ போன்றோரால் பதியப்பட்டுள்ளது.
المعجم الكبير للطبراني (8/ 264)
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةِ جُمُعَةٍ، أَوْ يَوْمَ جُمُعَةٍ بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ
யார் சூரா துகானை வெள்ளி இரவையிலோ, பகலிலோ ஓதுகின்றாரோ, அவருக்கு அதன் மூலம் சுவனத்தில் அல்லாஹ் ஒரு வீட்டைக் கட்டுகின்றான்.
இது தப்ரானி அவர்களின் முஃஜம் கபீரில் பதியப்பட்டுள்ள செய்தியாகும்.
சூரா காபிர்
من قرأ { الدخان } كلها ، وأول { حم غافر } إلى {وإليه المصير } ، و { آية الكرسي } حين يمسي ؛ حفظ بها حتى يصبح ، ومن قرأها حين يصبح ، حفظ بها حتى يمسي
யார் சூரா துகானையும், சூரா காபிரின் ஆரம்பத்திலிருந்து “இளைஹில் மஸீர்” என்பது வரையும், ஆயதுல் குர்ஸியையும் மலையில் ஓதுகின்றாரோ அவருக்கு காலை வரைக்கும், காலையில் ஓதியவருக்கு மாலை வரையும் பாதுகாப்பு அளிக்கப்படும்.
مسند أحمد ط الرسالة (33/ 421)
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ: أَعُوذُ بِاللهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، ثُمَّ قَرَأَ الثَّلَاثَ آيَاتٍ مِنْ آخِرِ سُورَةِ الْحَشْرِ، وَكَّلَ اللهُ بِهِ سَبْعِينَ أَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ حَتَّى يُمْسِيَ، إِنْ مَاتَ فِي ذَلِكَ الْيَوْمِ مَاتَ شَهِيدًا، وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي كَانَ بِتِلْكَ الْمَنْزِلَةِ )
யார் காலை நேரத்தை அடையும் போது “அஊது பில்லாஹிஸ் ஸமீஇல் அலீம் மினஷ் ஷைத்தானிர் ரஜீம், என்று கூறிவிட்டு, சூரதுல் ஹஷ்ரின் கடைசி மூன்று வசனங்களை ஓதுகின்றாரோ அவரை மாலை வரை பாதுகாக்க எழுபதுனாயிரம் மலக்குகளை அல்லாஹ் சாட்டுகின்றான், அவர்கள் அவருக்காக துஆவும் செய்கின்றனர். அந்த நாளில் அவர் மரணித்து விட்டால் அவர் ஷஹீதாக மரணிக்கின்றார். யார் மாலையில் ஓதுகின்றாரோ அவரும் அதே அந்தஸ்த்தை அடைவார்.
இது திர்மிதீ, அஹ்மத் , தாரிமீ போன்ற கிதப்களில் பதியப்பட்டுள்ளது.
சூரதுல் ஹஷ்ர்
شعب الإيمان (4/ 121)
أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَرَأَ خَوَاتِيمَ الْحَشْرِ فِي لَيْلةٍ أَوْ نَهَارٍ فَمَاتَ مِنْ يَوْمِهِ أَوْ لَيْلَتِهِ فَقَدْ أَوْجَبَ الْجَنَّةَ “
யாராவது சூரா ஹஷ்ரின் கடைசி வசனங்களை இரவையிலோ பகலிலோ ஓதி, அதே நாளையில் மரணித்தால் அவருக்கு சுர்க்கம் கடமையாகும்.
இந்த செய்தி ஷுஅபுல் ஈமானில் பதியப்பட்டுள்ளது. இதே செய்தி அனஸ் ரழி வழியாக ( அவரது முன் பின் பாவம் மன்னிக்கப்படும்) என்று சஃலபி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இன்னும் சில அறிவிப்பில் (அந்த இரவில் மரணித்தால் ஷஹீதாக மரணிப்பார்) என்றும் வந்துள்ளது.
ابن السني في عمل يوم وليلة – عن أنس: إذا أخذت مضجعك فاقرأ سورة الحشر ، إن مت مت شهيدا
நீ படுக்கைக்கு சென்றால் சூரதுல் ஹஷ்ரை ஓதிக்கொள், நீ மரணித்தால் ஷஹீதாக மரணிப்பாய்.
இது இப்னுஸ் சுன்னியில் பதியப்பட்டுள்ளது.
عن ابن عباس: اسم الله الأعظم في ست آيات من آخر سورة الحشر
அல்லாஹ்வின் உயர்த்தியான பெயர் சூரதுல் ஹஷ்ரின் கடைசி ஆறு வசனங்களில் உள்ளது.
சூரதுர் ரஹ்மான்
شعب الإيمان (4/ 117)
عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لِكُلِّ شَيْءٍ عَرُوسٌ، وَعَرُوسُ الْقُرْآنِ الرَّحْمَنُ
ஒவ்வொன்றுக்கும் புது மாப்பிள்ளை இருக்கின்றது, அல்குர் ஆனின் புது மாப்பிள்ளை சூரா ரஹ்மானாகும்.
இது ஷுஅபுல் ஈமானில் பதியப்பட்டுள்ளது.
சூரதுல் வாகிஆ
عن أنس: علموا نساءكم سورة {الواقعة}، فإنها سورة الغنى
உங்கள் பெண்களுக்கு சூரதுல் வாகிஆவை கற்றுக்கொடுங்கள், ஏனெனில் அதி வசதியை தரும் சூராவாகும்.
இது தைலமியில் பதியப்பட்டுள்ள செய்தியாகும்.இப்னு மர்தவைஹி பதியும் போது “சிறார்களுக்கு கற்றுக்கொடுங்கள்” என்று வந்துள்ளது.
تخريج أحاديث الكشاف (3/ 412)
عَن ابْن مَسْعُود قَالَ سَمِعت رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ يَقُول (من قَرَأَ سُورَة الْوَاقِعَة كل لَيْلَة لم تصبه فاقة أبدا
யார் சூரா வாகிஆவை ஒவ்வொரு இரவையிலும் ஓதுகின்றாரோ அவருக்கு வறுமையே ஏற்படாது.
عن أنس رفعه: من قرأ سورة (الواقعة و تعلمها، لم يكتب من الغافلين ، و لم يفتقر هو و أهل بيته
யார் சூரா வாகிஆவை கற்று, அதனை ஓதுகின்றாரோ அவர் மறதியாளர்களில் எழுதப்படமாட்டார், மேலும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வறுமை ஏற்படமாட்டாது.
சூரா ஸுல்ஸிலத்
سنن الترمذي ت بشار (5/ 16)
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا زُلْزِلَتْ تَعْدِلُ نِصْفَ القُرْآنِ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ القُرْآنِ، وَقُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ تَعْدِلُ رُبُعَ القُرْآنِ.
இதா ஸுல்ஸிலத் என்பது அல்குர்ஆனின் அரைவாசிக்கும், குல்ஹுவல்லாஹு அஹத் மூன்றில் ஒன்றுக்கும், அல்காபிரூன் நான்கில் ஒன்றுக்கும் சமனாகும்.
இந்த செய்தி திர்மிதீ,ஷுஅபுல் ஈமான் போன்ற கிதாப்களில் பதியப்பட்டுள்ளது.
சூரதுல் பீல், சூரா நஷ்ரஹ்
” من قرأ في الفجر بـ {ألم نشرح} و {ألم تر كيف} لم يرمد
யார் சுப்ஹுடைய சுன்னத்தில் அலம் நஷ்ரஹ் சூராவையும், பீல் சூராவையும் ஓதுகின்றாரோ அவருக்கு கண்நோய் வரமாட்டாது.
சூரதுல் கதர்
- ( من قرأ في إثر وضوئه :{ إنا أنزلناه في ليلة القدر } مرة واحدة كان من الصديقين ، و من قرأها مرتين كتب في ديوان الشهداء ، و من قرأها ثلاثا حشره الله محشر الأنبياء
யார் வுழூவுக்குப் பின் அல்கத்ர் சூராவை ஒரு விடுத்தம் ஓதுகின்றாரோ அவர் உண்மையாளர்களோடு இருப்பார், இரண்டு விடுத்தம் ஓதியவர் ஷுஹதாக்கள் பட்டியலில் இருப்பார், மூன்று விடுத்தம் ஓதியவரை அல்லாஹ் நபிமார்களோடு எழுப்புவான்.
இது தைலமீயில் பதியப்பட்டுள்ளது,
சூரதுல் இக்லாஸ்
المعجم الأوسط (6/ 57)
عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ الْعَنْبَرِيُّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ فِي مَرَضِهِ الَّذِي يَمُوتُ فِيهِ لَمْ يُفْتَنْ فِي قَبْرِهِ، وَأَمِنَ مِنْ ضَغْطَةً الْقَبْرِ، وَحَمَلَتْهُ الْمَلَائِكَةُ يَوْمَ الْقِيَامَةِ [ص:58] بِأَكُفَّهَا حَتَّى تُجِيزُهُ الصِّرَاطَ إِلَى الْجَنَّةِ»
யார் மரணப் படுக்கையில் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை ஓதுகின்றாரோ அவர் கப்ரில் தண்டிக்கப்படமாட்டார், மேலும் அவரை மறுமையில் பாலத்திற்கு மேலால் தன் இறக்கைகளால் சுமந்து செல்வார்கள்.
இது அல் முஃஜமுல் அவ்சதில் பதியப்பட்டுள்ளது,
யார் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை பத்து விடுத்தம், இருபது விடுத்தம், ஓதுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு வீடு கட்டுவான்.
இது இப்னு சஞ்சவைஹியின் மூலம் பதியப்பட்டுள்ளது,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:مَنْ قَرَأَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ مِائَتَيْ مَرَّةٍ، غُفِرَتْ لَهُ ذُنُوبُ مِائَتَيْ سَنَةٍ “
யார் குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை இருனூரு விடுத்தம் ஓதுகின்றாரோ அவருக்கு இருனூரு வருடங்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
இது முஸ்னதுல் பஸ்ஸரிலும், ஷுஅபுல் ஈமானிலும் பதியப்பட்டுள்ளது. மேலும் “கலீல் பின் முற்றா” என்பவர் வழியாக ஷுஅபுல் ஈமானில் பதிவு செய்யப்படும் போது, ” கொலை,கலவு, விபச்சாரம், குடி ஆகிய நான்கு பாவங்களை தவிர்ந்திருந்தால் ஐம்பது ஆண்டுகளின் பாவம் மன்னிக்கப்படும்” என்று வந்துள்ளது. மேலும் இந்த செய்தி “அபூ அம்மார்” வழியாக “தர்தீபுல் ஆமாலீ” எனும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது,
من قرأ قل هو الله أحد مائتي مرة كتب الله له ألفا و خمسمائة حسنة ، إلا أن يكون عليه دين
யார் குல்ஹுவல்லாஹு அஹதை இருனூரு விடுத்தம் ஓதுகின்றாரோ அவருக்கு ஆயிரத்தைனூரு நன்மைகளை அல்லாஹ் எழுதுகின்றான். அவன் கடனாளியாக இருந்தாலேயன்றி.
இதனை திர்மிதீ, இப்னு அதீ அவர்களும், பைஹகீ அவர்கள் ஷுஅபில் ஈமானிலும் பதிந்துள்ளனர்.
இதே கருத்தில் வார்த்தை வித்தியாசத்தோடு பல அறிவிப்புகள் வந்துள்ளன,
من مر بالمقابر فقرأ ( قل هو الله أحد ) إحدى عشرة مرة ، ثم وهب أجره للأموات، أعطي من الأجر بعدد الأموات )
யாராவது கப்ருகளுக்கு அருகாமையால் கடந்து செல்லும் போது, குல்ஹுவல்லாஹு அஹதை பதினோரு தடவைகள் ஓதி, அதனை மரணித்தவர்களுக்கு ஹதியா செய்தால், மரணித்தவர்களின் எண்ணிக்கையளவு அவருக்கு மன்னிப்பளிக்கப்படும்.
இதனை அபூ முஹம்மத் அல்கல்லால், தைலமீ போன்றோர் பதிவு செய்துள்ளனர். இதே செய்தி “தாவூத் பின் சுலைமான் அல்காஸீ” வழியாக பதியப்பட்டுள்ளது,
المعجم الكبير للطبراني (22/ 96)
أَسْمَاءُ بِنْتُ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَتْ: كَانَ أَبِي إِذَا صَلَّى الصُّبْحَ جَلَسَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ لَا يَتَكَلَّمُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَرُبَّمَا كَلَّمْتُهُ فِي الْحَاجَةِ فَلَا يُكَلِّمُنِي، فَقُلْتُ: مَا هَذَا؟ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَلَّى الصُّبْحَ، ثُمَّ قَرَأَ قُلْ هُوَ اللهُ أَحَدٌ مِائَةَ مَرَّةً قَبْلَ أَنْ يَتَكَلَّمَ، فَكُلَّمَا قَرَأَ قُلْ هُوَ اللهُ أَحَدٌ غُفِرَ لَهُ ذَنْبُ سَنَةٍ»
யாராவது சுப்ஹைத் தொழுதுவிட்டு, யாரோடும் பேச முன்னர் நூரு விடுத்தம் குல்ஹுவல்லாஹு அஹதை ஓதினால், ஒவ்வொரு தடவை ஊதும் போதும் நூரு வருடத்தின் பாவம் மன்னிக்கப்படும்.
இதனை இப்னுஸ் சுன்னீ அவர்கள் “அமலுள் யவ்மி வல்லைளா” ளிலும், பைஹகீ அவர்கள் “முஃஜமுள் கபீரிலும்” பதிந்துள்ளனர்.
No comments:
Post a Comment