Saturday, August 12, 2017

உம்மத்தின் மேல் கொண்ட நேசம்

•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்திலே கேட்கிறார்கள்… அல்லாஹ்வுடைய தூதரே எனக்காக அல்லாஹ்விடத்திலே ஒரு முறை பிரார்த்தனையை செய்யுங்களேன்…
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்… 
யா அல்லாஹ்…
ஆயிஷா (ரலி) யை மன்னித்துவிடு… அவர்கள் முன் செய்த பாவத்தை, பின் செய்த பாவத்தை, அவர்கள் மறைத்து செய்ததை, வெளிப்படையாக செய்ததை என எல்லா பாவங்களையும் மன்னித்துவிடு என்றார்கள்…
ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த பிரார்த்தனையை கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்து தூதருடைய மடியில் சாய்கிறார்கள்…
தூதர் அவர்கள் கேட்டார்கள்..
ஆயிஷா இந்த பிரார்த்தனை உன்னை மகிழ்ச்சியடையச் செய்கிறதா…?

ஆயிஷா (ரலி) சொன்னார்கள் ஆம் அல்லாஹ்வின் தூதரே என் பாவத்திற்காக என் ஹபீப் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பை தேடும்போது நான் எப்படி மகிழ்ச்சியடையாமல் இருப்பேன்…
அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்.. ஆயிஷா உனக்குத் தெரியுமா…?
''இந்த பிரார்த்தனையைத் தான் ஒவ்வொரு தொழுகையிலும் என் உம்மத்திற்காக நான் கேட்கிறேன்…''
சுப்ஹானல்லாஹ்…
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தன் உம்மத்தின் மேல் கொண்ட நேசத்தை கற்பனை கூட செய்ய முடியாது…

No comments:

Post a Comment