அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவரது உலகத் தொடர்புகள் யாவும் அறுந்து விடுகின்றன.
மூன்று விஷயங்களைத் தவிர அவை
குழந்தைகளை வளர்க்கும் நீங்கள் முதன் முதலில் உன்மையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் எதைச் செய்கின்றீர்களோ அது நல்லதாகவும் நீங்கள் எதைத் தவிர்க்கின்றீர்களோ அது கெட்டதாகவும் குழந்தைகளிடம் கருதப்படும் எனவே
ஆசிரியரும் பெற்றோரும் குழந்தைகளிடம் மேற்கொள்ளும் சிறந்த அணுகுமுறையே குழந்தைகளைப் பண்படுத்தும் சிறந்த வழியாகும்.
மேலும் குழந்தைகளைப் பரிபாலிப்பவர்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டியவை..👇
1) குழந்தைப் பருவத்திலேயே லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதூர் ரஸூலுல்லாஹ் என்ற உறுதிமொழியைக்
கற்றுக் கொடுக்க வேண்டும். பருவமெய்தும் போது அதன் கருத்தாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை விளக்க வேண்டும்.
2) இறைவனின் நேசத்தையும் அவனை விசுவாசிப்பதையும் குழந்தையின் உள்ளத்தில் விதைக்க வேண்டும் ஏனெனில் அல்லாஹ் தான் நம்மைப் படைத்தான் உணவளிப்பவன் இரட்சிப்பவன் அவனுக்கு இணையென்று யாருமில்லை அவனை உண்மையில்
வணங்கப்படத் தகுதியானவன்.
3) குழந்தைகளுக்கு சொர்க்கத்தைப் பற்றி ஆசையை உள்ளத்தில் ஊட்ட வேண்டும்
யார் தொழுது நோன்பு நோற்று பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு இறைவனின் திருப்தியை எதிர்பார்த்து நல்ல அமல்கள் செய்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதைக் கூற வேண்டும்.
மேலும் நரகத்தைப் பற்றியும் அச்சமூட்ட வேண்டும். யார் தொழாமல் நோன்பு நோற்காமல் பெற்றோர்களை மதிக்காமலும் நோவினைப் படுத்திக்கொண்டு இறைவனை அதிருப்திப்படுத்தி கொண்டு வட்டி வாங்கியும் வட்டி கொடுத்தும் தீமைகளை செய்கிறார்களோ அவர்களுக்கு நரகம் நான் நிரந்தரமாக கிடைக்கும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
4) அல்லாஹ்விடம் மட்டுமே தொழுகையைக் கொண்டு எதையும் கேட்கவோ உதவி தேடவோ வேண்டும் எனக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் நபி ( ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தையின் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நீ எதையும் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடுவதாக இருந்தாலும் அவனிடமே உதவியும் தேடு எனக் கூறினார்கள். (திர்மிதீ)
நன்றி :
Sahinath Isbha
No comments:
Post a Comment