Friday, August 18, 2017

கருணை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ....
இறைத்தூதர் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
🍀 "படைப்பினங்களின் மீது கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்".
#புகாரி : 6013.
 எப்பொழுதும் ஒருவரை ஊக்குவிக்கும் வார்த்தைகள் கொண்டு அணுகுங்கள்.,
 தட்டிக்கொடுப்பவராகஇருங்கள்.. வாடிப்போன முகங்களுக்கு புன்னகையை பரிசளிப்பவராக இருங்கள்..

 ஒருவரின் மகிழ்ச்சிக்குகாரணமாக இருங்கள்..
 பொறுமையின் மகிமை உணர்த்துபவராக இருங்கள்.
 பிறருடன் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்..
 ஒருபொழுதும் ஒருவரின் கண்ணீருக்கு காரணமாக இருந்துவிடாதீர்கள்..
 ஒருவரின் மனமுறிவுகளுக்கு துணையாகவோ காரணமாகவோ இருந்துவிடாதீர்கள்..
 உங்களால் நோவினைக்குட்பட்டவர்களின் பிரார்த்தனை உங்கள் வாழ்க்கையையே நாசமாக்கிவிடக்கூடும்.
 வாழும் வரை பிறருடன் நல்ல முறையில் நடந்துகொள்வோம்.! இறைவன் அருள் புரிவானாக....
நன்றி : ஆபி 

No comments:

Post a Comment