Sunday, August 27, 2017

பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
*💁🏻‍♂பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்*
💢🍂ஏழைகள் பட்டினியால் வாடாமல் இருப்பதற்காக பணக்காரர்கள் *சேமித்து வைப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் தடுத்ததை கவனத்தில்* கொள்ள வேண்டும். ஏழைகளைக் கவனத்தில் வைத்தே பெருமானார் இவ்வாறு செய்துள்ளார்கள். நமது பகுதியில் *ஏழைகள் மிகுதியாக இருப்பதினால் அவர்களையும் அவசியம் பங்கில் இணைத்துக்* கொள்ள வேண்டும்.
💢🍃நபி (ஸல்) அவர்களின் காலத்தில் *பெருநாளன்று அண்டை வீட்டார்கள் உறவினர்கள் ஏழைகள்* ஆகியோருக்கு நபித்தோழர்கள் இறைச்சியைக் கொடுத்து வந்தார்கள். இதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக உள்ளன.
💢🔷நபி (ஸல்) அவர்கள் (பெருநாள்) *தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்* என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள் என்று சொல்லிவிட்டு தம் அண்டை வீட்டாரின் தேவை( யினால் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டதாக) குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் இருந்தது. .
🗣அறிவிப்பவர் : *அனஸ்* (ரலி)   📚நூல் : *புகாரி* (5561)
💢🍂அபூபுர்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நானும் சாப்பிட்டுவிட்டு எனது *குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும்* உண்ணக் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக *புகாரியில் 983* வது செய்தியில் பதிவாகியுள்ளது.
💢🍃நான் *அபூஅய்யூப் அல்அன்சாரீ* அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் *ஒரு ஆட்டை குர்பானி* கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) *பெருமையடித்துக் கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை* உருவாகிவிட்டது.
🗣அறிவிப்பவர் : *அதா பின் யசார்*  📚நூல் : *திர்மிதி* 1425.
மூலம் : ஆபி 

No comments:

Post a Comment