Wednesday, August 30, 2017

மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..


🗣கேள்வி : ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது?
பதில் : ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள்பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.
1.தூங்குபவர் விழிக்கின்ற வரை,
2.சிறுவன் பெரியவராகும் வரை,
3.பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
#அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), #நூல்கள் : நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031.
🍁 சிறுவர்கள் எதையுமே புரிந்து கொள்ளாத தத்தி தவழும் பருவத்தில் உள்ளவர்கள் ஒருவகை. இத்தகைய பருவத்தில் உள்ளவர்களுக்கு தடை செய்யப்பட்ட தங்க நகை அணிவித்தல் தவறாகாது.
🍁 ஆனால் புரிந்து கொள்ளும் பருவத்தை அடைந்து விட்டால் அவர்களுக்கு சட்ட திட்டங்களையும் கடமைகளையும் புரியவைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.
மூலம் : Sahinath Isbhaஅரபி பேச கற்று கொள்வோம்
to
 

No comments:

Post a Comment