அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
6785. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “விடைபெறும்“ ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்) “மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியும்?“ என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்“ என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த ஊர் “(மக்கா“) தான்“ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள் “மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்“ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்“ என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?“ என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள்,“ஆம்“ என்று நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர். பிறகு, “உங்களுக்கு அழிவுதான்“ அல்லது “உங்களுக்குக் கேடுதான்“! எனக்குப் பின்னால் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்கள் நீங்கள் மாறிவிடவேண்டாம்“ என்றார்கள்.10 ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 86. குற்றவியல் தண்டனைகள்
No comments:
Post a Comment