Tuesday, September 5, 2017

விபச்சாரத்திற்கு ஈட்டு தொகை கிடையாது. தண்டனையே சட்டம்.

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
7260. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்  இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்“ என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, “இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்“ என்றார். 
உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, “இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல) அனுமதியளியுங்கள்“ என்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள்,  “சரி சொல்“ என்றார்கள். (இதற்கிடையில் அந்தக் கிரமாவாசி) “என் மகன் இவரிடம் கூலிக்கு வேலை செய்து வந்தான். இவருடைய மனைவியுடன் அவன் விபசாரம் புரிந்துவிட்டான். அப்போது மக்கள் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என என்னிடம் தெரிவித்தனர். எனவே நான் அதற்கு பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈடாக வழங்கினேன். பிறகு அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள்,  இவருடைய மனைவியைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும்,  என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு நாடு கடத்தலும் தான் (தண்டனை) என்றும் தெரிவித்தார்கள்“ என்று கூறினார். 
நபி(ஸல்) அவர்கள்,  “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் உங்கள் இருவரிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிக்கிறேன்: 
“அடிமைப் பெண்ணையும் ஆடுகளையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். உம் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்படவேண்டும்“ என்று கூறிவிட்டு அஸ்லம் குலத்து மனிதர் ஒருவரை நோக்கி “உனைஸே! நீங்கள் இவருடைய மனைவியிடம் செல்லுங்கள். அவள் (விபசாரம் புரிந்தது உண்மைதான் என) ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொன்றுவிடுங்கள்“ என்றார்கள். 
அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக் கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக்கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 95. தனிநபர் தரும் தகவல்கள்
மூலம் : Murshitha Munifiyaதுஆக்களின் தொகுப்பு

to
 

No comments:

Post a Comment