Wednesday, September 6, 2017

வீரமங்கையின் வீரவரலாறு - **அஸ்மா பின்த்தி அபீபக்கர் ரலியல்லாஹூ அன்ஹா**

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஆருயிர் தோழர்  அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மூத்த மகளும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும்போது சுவர்க்கத்தின் 
நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜுபைர் இப்னுல் அவ்வாம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மனைவியும், வீர தியாகி அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தான்...!!

இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் சிறு வயதில் இருந்து மார்க்கத்திற்காக பல பணிகளை மேற்கொண்டுள்ளார்...!!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரகசியமாக அழைப்புப் பணியை மேற்கொண்ட காலத்தில் சுமார் 17 நபர்கள் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர்....!!
அந்தக் காலத்தில் 18 வது நபராக இஸ்லாத்தை ஏற்றவர் இந்த அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள். சிறு வயதில் அல்லாஹ்வின் தூதருக்கும், அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கும் அழைப்புப் பணியில் ஏற்பட்ட கொடுமைகளைப் பார்த்து வளர்ந்ததால் இவரின் ஈமான் வலுப் பெற்றது.....!!
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்களும், அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் ஹிஜ்ரத்தின் பொழுது எதிரியின் திட்டத்திலிருந்து தப்ப தௌர் குகையில் தங்கினர்.
அப்பொழுது அவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் பணியை அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா தான் செய்தார்கள்...!!
ஜுபைர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை திருமணம் முடித்த பின் குடும்பத்தை வறுமையும்,,
ஏழ்மையும் சூழ்ந்த நேரத்தில் மனம் தளராமல் சரியான முறையில் குடும்பத்தை நடத்தினார்.
பின் வியாபாரத்தின் மூலம் குடும்பத்தில் செல்வம் வந்து சேர்ந்தது. அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் மதீனாவுக்கு ஹிஜரத் செய்தபின் முதல் குழந்தை பிறந்தது. முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் போர்களிலும் கலந்து கொண்டுள்ளார்கள்.! அவர்கள் எப்பொழுதும் தலைக்கருகில் ஒரு பட்டாக்கத்தியை வைத்திருப்பார்கள். காரணம் அந்தக் காலத்தில் திருட்டு அதிகம்....!!
அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் மகனான அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் பெயரை கேட்டால் பனூ உமையாக்களின் தலைவர்கள் இரவு முழுவது தூங்க மாட்டார்கள்......!!
அவ்வளவு அச்சம் அவர்களுக்கு அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் மீது  ஒருமுறை அப்துல்லாஹ் ரலியல்லாஹூ போருக்கு செல்ல அன்னையிடம் அனுமதி கேட்டார். அன்னையும் அனுமதி அளித்தார்கள்.
பின் அந்தத் தாய் அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தன் மகன் அப்துல்லாஹ் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கு கூறிய அறிவுரையைப் பார்த்தால் இப்படியும் ஒரு தாய் இருந்தார்களா என்று நினைக்க தோன்றுகிறது....!!
அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள், “என் அருமை மகனே! நீ சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய். ஆதலால் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்கு காரணமாக அமையும். அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு” என்று கூற, மகன் அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அன்னையைக் கட்டித் தழுவினார்...!!
அப்பொழுது அன்னை அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வயது முதிர்ச்சியால் பார்வை குன்றியிருந்தார்கள். மகனின் உடலில் கவசம் இருப்பதை உணர்ந்த அந்தத் தாய் இவ்வாறு கூறினார்கள்:
“மகனே! யார் சத்தியதிற்காக உயிரை தியாகம் செய்ய துணிந்தாரோ அவர் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே நீ அதைக் கழற்றி விடு.” பின் அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவ்வாறே போரினில் கலந்து உயிர்த் தியாகம் அடைந்தார். இறந்த அப்துல்லாஹ்வை (ரலியல்லாஹூ அன்ஹூ) ஹஜ்ஜாஜ் கழுமரத்தில் கட்டி தொங்கவிட்டான்...!!
மறுநாள் அப்துல்லாஹ்வின் (ரலியல்லாஹூ அன்ஹூ) உடலை தேடி வந்தார்,,, அந்த வீரத் தாய்,அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் கழுமரத்தில் கட்டி தொங்கவிட்டு இருக்கும் தன் மகனைப் பார்த்து சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
“இஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையா?” என்று....!!! பின்பு மகனைக் கொன்ற ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபிடம் அந்த வீரத்தாய் கூறியது: ” நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத் தான் பாழ்படுத்தினாய். ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்க்கையை பாழ்படுத்திவிட்டானே ” என்று கூறிவிட்டு அங்கிருந்து வீர நடை போட்டுச்சென்று விட்டார் அந்தத் தாயார். 
கேவலப்பட்டவனாகத் தலை குனிந்து அங்கிருந்து சென்றான் ஹஜ்ஜாஜ். 
எந்நிலையிலும் ஒரு இறை நம்பிக்கையாளர் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டார்.பிறருக்கு முன் தன்னை இழிவு படுத்திக் கொள்ளவும் மாட்டார்.
கண்ணியமும் கவுரவமும் இறைவன் கொடுப்பது. அதனை நாம் பிறரிடம் எதிர்பார்க்ககூடாது...!!
***************************************
அல்குர்ஆன்: 35:10.

எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, அப்போது (அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்தைத் தேடவும்,ஏனெனில்) கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது; (என்பதை அறிந்து கொள்ளவும்); அவன் பக்கமே தூய்மையான சொற்கள் ஏறிச் செல்கின்றது; நற்செயல் அதனை உயர்த்துகிறது; எவர் தீமைகளுக்கு சூழ்ச்சி செய்கின்றனரோ அத்தகையோருக்கு கடுமையான வேதனையுண்டு; அவர்களுடைய சூழ்ச்சி அது அழிந்துவிடும்....!!

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
மூலம் : ஸித்றத்துல் முன்தஹா

No comments:

Post a Comment