Sunday, December 24, 2017

வலிகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் முத்தான உபதேசங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
**********
உண்மை விசுவாசத்துடன் நபிபெருமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பாதச்சுவட்டை பின்பற்றி நடவுங்கள்!
மார்க்கத்தில் புதுமை பித்அத் ஆனவைகளை உண்டாக்க வேண்டாம். இறைவனுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படியுங்கள்...!
வழி தவறிவிடவேண்டாம்,,
ஏகத்துவத்தைப் பாதுகாத்து இறைவன் எத்தீமையையும் உண்டாக்கி விட்டான் என்று கூறாதபடி உங்களைப் பேணிக் கொள்ளுங்கள் .!
அவன் சத்தியத்தை நிலை நாட்டி, ஐயத்திற்கு இடம் தராதிருங்கள்!
பொறுமையுடன் நிதானம் தவறாதிருங்கள்.
உறுதியுள்ளவர்களாய், ஓடிப்போகாதிருங்கள், உங்கள் தேவைகளுக்கு அவனிடமே முறையிடுங்கள்..!
அம்முறையீடு கேட்கப்படுவதற்கு பொறுமையுடன் காத்திருங்கள்!
அவனுக்கு அடிபணிவதில் ஐக்கியப்படுங்கள், ஒற்றுமைக்குலைவுக்கு இடந்தரவேண்டாம்.!
பரஸ்பரம் அன்பு காட்டுங்கள்.!
ஒருவரை ஒருவர் துவேசிக்க வேண்டாம்.
தீய பழக்கங்களிலிருந்து விலகுங்கள்,,
அவற்றால் மாசடைந்து விடாதீர்கள்.!
உங்கள் ரக்ஷகனுக்கு அடிபணிவதன் மூலம் உங்களை அழகுபடுத்துங்கள்.!
அவனிடம் கவனம் காட்டத்தவற வேண்டாம் .!
நீங்கள் செய்த தவறுகள் குறித்து பச்சாதாப்படத் தாமதம் வேண்டாம் .!
அல்லும் பகலும் உங்களை சிருஷ்டித்தவனை நினைவு கூறாது சாக்குப்போக்குச் சொல்லவேண்டாம்.!
இவ்விதம் சதா அவன் தியானத்திலேயே இருந்தால் உங்களிடம் கருணை காட்டப்படலாம்.!
உங்களுக்கு நல்லதிஷ்டம் உண்டாகலாம்.!
நரகாக்கினியிலிருந்து விமோசனமும் சுவர்க்க வாழ்வு பெற்றுச் சாந்தியின் உறைவிடத்திலே,,,
ஹூரில் ஈன்களின் குழாத்திடையில் இறைவனின் ஆசியோடு தரிபட்டிருக்கலாம்.
அதே நிலையில் என்றும் இருக்கலாம்.!
நல்ல குதிரைகள் மீது சவாரி செய்யலாம். கண்ணழகிகளின் நேசத்தில் மகிழலாம்.
பலவித வாசணைகளும் பெண்களின் இன்னிசையும் மற்றும் பல பாக்கியங்களும் அங்கே கிட்டும் உயரிய வாணுலகில் நபிமார்கள்,சத்திய நேயர்கள்,
வீரத்தியாகிகள், நேர் வழியாளர்களின் கூட்டத்திற்கு உயர்த்தப்பட்டவர்கள் ஆகுங்கள்.!
(முஹ்யித்தீன் ஆண்டகை வாழ்க்கை வரலாற்றில் இருந்து )
இறை பாக்கியம் பெற்ற வலிமார்களின் கூட்டத்தில் அல்லாஹூத ஆலா நம்மை ஒன்று சேர்ப்பானாக.!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மதின்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.
மூலம் : Amir Qathiri

No comments:

Post a Comment