"நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானி ஒருவர் லைலதுர் கத்ர் இரவு பற்றி விஞ்ஞான பூர்வமாக அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
நாஸா ஆராய்ச்சி மையத்தகவல் படி ஒரு நாளைக்கு பூமியை நோக்கி 10000 தொடக்கம் 20000 வரை விண்கற்கள் வீசப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருடத்தில் 365 நாட்களும் இந்த நிகழ்வு இடம்பெற்று வந்தபோதும் ஒரு நாளில் மாத்திரம் இந்த நிகழ்வு இடம்பெறவில்லை என நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பில் கடந்த 10 வருடங்களாக அறிந்து வைத்திருந்த ரகசியத்தை நாஸா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி காரன்ஸ் என்பவர் வெளியிட்டுள்ளதோடு அவர் புனித இஸ்லாம் மதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் சவுதி அரேபியாவின் அல் குர்ஆன் ஆராய்ச்சி மையத்திடம் கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானி கொலரன்ஸ் ..
'நான் கடந்த பத்து வருடங்களாக பூமியை நோக்கி வீசப்படும் விண்கற்கள் தொடர்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன் ஒரு நாளைக்கு சுமார் 10000 தொடக்கம் 20000 விண்கற்கள் பூமியை நோக்கி எறியப்படுகிறது.வருடத்தில் ஒரு நாளைத்தவிர மற்றைய தினங்களில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.
இது தொடர்பில் நான் ஆராய்ந்த போது லைலதுல் கத்ர் இரவு பற்றி அறிந்துகொண்டேன்.
அந்த இரவில் வான்வெளி மயான அமைதியாக இருக்கும் என்ற விடயத்தையும் ரமலான் மாதம் கடைசி 10 இல் எதோ ஒரு தினத்தில் இடம்பெறுகிறது என நான் அறிந்துகொண்டேன்.
பூமியை நோக்கி எரிகற்கள் வீசப்படாமல் வான்வெளி மயான அமைதியாக இருப்பது ரமலான் கடைசி பத்தில் ஒரு தினத்தில் என்ற விடயத்தினை நான் கடந்த 10 வருடங்களாக அவதானித்து வருகிறேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை அறிவித்துள்ள அவர் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என அல் குர்ஆன் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விடயத்தை நேற்று கண்டி மெனிக்கின்னை பகுதியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகையில் குத்பா பிரசங்கத்தை நடத்திய ரிஸ்வான் மதனி அவர்கள் அரபு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி தெரிவித்திருந்தார்.
மூலம் : நூர் - துஆக்களின் தொகுப்பு
No comments:
Post a Comment