Tuesday, February 27, 2018

கியாமத்_நாளை_நோக்கி👇

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
#அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.   📚 புஹாரி 1596.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

#யஃஜூஜ் #மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.' என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
'கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷுஅபாவின் அறிவிப்பு கூறுகிறது.
மேலேயுள்ள முதல் அறிவிப்பே பெரும்பாலோரால் அறிவிக்கப்பட்டுள்ளது
📚 புஹாரி 1593

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), #நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.' என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு ( #ஆட்சியதிகாரம், #நீதி #நிர்வாகம் போன்ற) #எந்தப் #பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.*
📚 புஹாரி 6496

ஸயீத் அல் உமவி(ரஹ்)அவர்கள் கூறினார்.
நான் (முஆவியா - ரலி - அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் அவர்களுடனும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடனும் இருந்தேன். அப்போது அபூ ஹுரைரா(ரலி), உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான நபி(ஸல்) அவர்கள் #குறைஷிகளில் #சில #இளைஞர்க(ளான ஆட்சியாளர்க)ளின் கைகளால் தான் என்னுடைய (இன்றைய) சமுதாயத்தின் அழிவு உண்டு'* எனக் கூறக்கேட்டேன்' என்றார்கள். உடனே மர்வான், அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், 'இளைஞர்களா?' என்று கேட்க, அபூ ஹுரைரா(ரலி) அவர்களை, 'இன்னாரின் சந்ததிகள், இன்னாரின் மக்கள்' என்று தனித்தனியே பெயர் குறிப்பிட்டுச் சொல்வேன்' என்று பதிலளித்தார்கள்.
📚 புஹாரி 3605
மூலம் : முஹமது ஜமால்

No comments:

Post a Comment