1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் திரு கோதண்டராமன் போட்டியிடுகிறார். கடுமையான பிரச்சாரம் நடக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ‘மேம்பாலம்’ கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைக்கிறார்கள்.! காமராஜர் முதல்வர். பதவியில் இருக்கிறார்.மறுத்துவிட்டு வருகிறார். உடனிருந்தவர்கள் ‘நியாயமானதும்கூட. அதிக ஓட்டு கிடைக்கும் ’ என்று குறைபட்டுக்கொண்ட போது,“அது தப்பு. மக்கள் வைத்த கோரிக்கை நியாயமானதுதான். அதை தேர்தலுக்கு பிறகு செய்துகொடுத்துட வேண்டியதுதான். ஆனால் அதை சொல்லி ஓட்டு கேட்ககூடாது. நான் அப்படி கேட்டால் எதிர்கட்சி வேட்பாளர் கோதண்டம் என்ன சொல்லி ஓட்டு கேட்பார். அவரிடம் அதிகாரமில்லையே. நான் அதிகாரத்தை துஷபிரயோகம் செய்வதாகதானே அமையும். இது எப்படி ஜனநாயகமாகும்.” என்று கூறி மறுத்தே விட்டார்.! இன்றைய அரசியல் அப்படி இருக்கிறதா? காமராஜர் இல்லவிட்டாலும் அவர்கள் வாழ்ந்தது காட்டிய சத்தியை அரசியல் வாழ்க்கை உள்ளது இதை மக்கள் என்றும் விரும்புவார்கள் இதுதான் நிலைக்கும் ,!
நன்றி -Jayant Prabhakar -
Anwar Deen Maraicayar
No comments:
Post a Comment