ஒரு முதியவர், சென்னை அரசு மருத்துவ மனையில் சேரும்போது, தனது பெயருடன், மே/பா : காமராஜர், தலைவர், சத்தியமூர்த்திபவன், சென்னை என்று மருத்துவமனைப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கிறார். சில நாளில் அந்த முதியவர் இறந்துவிடுகிறார், காமராஜருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். “இறந்தவர் சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் தியாகி” என்றும் அரியப்பட்டது, காமராஜர் உடன் எல்லா நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டு , எதுவுமே சொல்லாமல் ஈஸி சேரில் சாய்ந்து கவலையுடன் அமர்ந்து விட்டாராம்.
சற்று நேரத்துக்குப் பின், அந்தத் தியாகியின் இறுதி சடங்கை எந்தக் குறையும் இல்லாமல் நல்ல முறையில் செய்ய உத்தரவிட்டாராம். எரியூட்டும் வேளை வந்தது, தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் “இந்த தியாகி யாரோ.? நாட்டுக்காக எல்லாவற்றையும் துறந்து, வாழ்ந்து இவர் மரணம் அடையும் முன், காங்கிரஸ் அலுவலக விலாசத்தையே, தன்னுடைய விலாசமாக தந்திருக்கிறார். இவருக்கு நாம் எல்லாருமே கொள்ளி போடுவோம். .”என்று காமாராஜர் தழுதழுத்த குரலில் இப்படிச் சொல்லவும் சுற்றி நின்ற எல்லோருமே கண்ணீர் விட்டு அழுதார்களாம்.!! (இது போன்ற பல தியாகங்கள் இன்றும் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது)
நன்றி : அன்வர் தீன் மரைக்காயர் - ஒளி அழகிய கடன் அறக்கட்டளை
No comments:
Post a Comment