அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
“இறைத்தூதர் அவர்களே, நீங்கள் இறைவனிடம் நிறைய துஆகள் செய்கிறீர்கள்...
அந்த துஆ வாசகங்களை எங்களால் எழுதி வைத்துக்கொள்ள முடியவில்லை...
நினைவில் இருத்திக் கொள்வதும் சிரமம்.
சுருக்கமாக ஏதேனும் துஆ இருந்தால் கற்றுத் தாருங்களேன்” என்று ஓர் எளிய மனிதர் வந்து இறைத்தூதரிடம் கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இறைவா, உன்னுடைய தூதர் உன்னிடம் என்னென்ன நன்மைகளைக் கேட்டாரோ அவற்றை எல்லாம் நானும் கேட்கிறேன்.
உன்னுடைய தூதர் எவற்றிலிருந்தெல்லாம் உன்னிடம் பாதுகாவல் தேடினாரோ அவற்றிலிருந்தெல்லாம் நானும் பாதுகாவல் தேடுகிறேன்” என்று துஆ செய்யுங்கள் என்றார் நபிகளார்.
அந்த மனிதரின் முகம் மலர்ந்தது.
நமக்கும் இதில் நல்ல வழிகாட்டல் உண்டு.
நபிகளார் செய்த அத்தனை பிரார்த்தனைகளையும் மனனம் செய்து கேட்பது சிரமம். இந்த வழிமுறையின் மூலம் பிரார்த்தித்தால் எல்லா நன்மைகளையும் அள்ளிக் கொள்ளலாம்.
இன்று வெள்ளிக்கிழமை. இன்றிலிருந்தே இந்த துஆவைத் ஓத தொடங்கிவிடுவோம்.
-சிராஜுல்ஹஸன்
No comments:
Post a Comment