அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே
இம்முழு மாதத்தைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக உறுதியான ஆதாரத்துடன் அறிய வருவது என்னவென்றால் ரஜப் மாதத்தின் பிறையை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டவுடன் பின்வரும் துவாவை ஓதுவார்கள். '
அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜபின் வஷஃபான வபல்லிங்னா ரமழானன'
(யா அல்லாஹ்! ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக)
என்று நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாத துவக்கத்திலிருந்து புனித ரமழான் மாதத்தினை அடையும் வரை ஓதி வந்திருக்கிறார்கள்.
நூல் முஸ்னத் அஹ்மத், தப்ரானீ
நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முன்கூட்டியே புனித ரமழான் மாதத்தின் வருகையை பற்றி மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள்.
இந்த துஆ ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது இதை ஓதுவது சுன்னத்தாகும். ஆகவே தினமும் இந்த தூஆவை நாமும் ஒதுவது சுன்னத்தாகும்.
ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும்.
ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும்.
ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்...
அமல்களை அழகாக்குவோம்...
நன்றி :
Saeed Islam Saeedhullah
No comments:
Post a Comment