Wednesday, March 21, 2018

அல்லாஹ் எங்கள் மீது திருப்தியுடன் இருக்கிறானா அல்லது அதிருப்தியுடன் இருக்கிறானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே  
‎وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (139ال عمران)
“நீங்கள் முஃமீன்களாக இருந்தால் நீங்கள்தான் உன்னதமானவர்களாய் இருப்பீர்கள்”

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ் எங்கள் மீது திருப்தியுடன் இருக்கிறானா அல்லது அதிருப்தியுடன் இருக்கிறானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது என்று, அல்லாஹ்விடம் கேட்டு எங்களிடம் கூறுங்கள். அதன்படி மூஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்; அதற்கு அல்லாஹ் கூறினான், நான் மக்கள் மீது திருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம், நல்ல ஆட்சியாளர்களை நான் அமர்த்துவேன். நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம் அவர்களைக் கெட்ட ஆட்சியாளர்களின் மூலம் சோதிப்பேன் என அல்லாஹ் கூறினான்.

இவ்வாறே நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்! நீ மக்கள் மீது திருப்தியுடன் இருப்பதற்கும், அதிருப்தியுடன் இருப்பதற்கும் என்ன அடையாளம் என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் நான் திருப்தியுடன் இருந்தால் விவசாயப் பூமிகளில் விதைகளைப் பயிரிடும் வேளையில் மழையை நான் இறக்குவேன். அறுவடை செய்யும் நேரத்தில் மழையை நிறுத்தி விடுவேன். மேலும் நல்ல ஆட்சியாளர்களையும் அமர்த்துவேன். ஆனால் நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருந்தால் விவசாய பூமிகளில் விதைகளைப் பயிரிடும் வேளையில் மழையை நான் நிறுத்தி விடுவேன். அறுவடை செய்யும் நேரத்தில் மழையை இறக்குவேன். மேலும் கெட்ட ஆட்சியாளர்களையும் அமர்த்துவேன், என அல்லாஹ் கூறினான்.
இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வதென்ன?
அண்மைக் காலமாக நமது இஸ்லாமிய சமூகம் உலகளாவிய ரீதியில் பல தரப்பட்ட கஷ்டங்களையும், உயிரிழப்புக்களையும், பொருளாதார அழிவுகளையும் எதிர் நோக்கி வருகின்றது. எனவே நமது சமூகம் வல்ல இறைவனின் கோபத்திற்கு ஆளாகி உள்ளதோ என்று ஓர் சந்தேகம் வருகின்றதல்லவா? ஆதலால், நமது வணக்க வழிபாடுகளை மட்டுமின்றி, இயல்பு வாழ்க்கையையும் சீர் செய்து வாழ்வோமாக! ஆமீன்..!

No comments:

Post a Comment