Thursday, March 8, 2018

உலக முடிவு நாளுக்கான அடையாளங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே 
 #நபிகள்_நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாத்தின் கயிறுகள் ஒவ்வொன்றாகத் துண்டிக்கப்படும். ஒரு கயிறு துண்டிக்கப்படும் போதெல்லாம் மக்கள் அதற்கு அடுத்ததைப் பற்றிப் பிடிப்பார்கள். அவைகளில் முதலாவதாகத் துண்டிக்கப்படுவது ஆட்சி அதிகாரம் ஆகும். அவைகளில் இறுதியானது தொழுகையாகும்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
📘 நூல் : அஹ்மத் 22214
-------------------------------------------------------------------------
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முடியை (உடையாக) அணிந்து, முடியில் (காலணி தயாரித்து) நடக்கின்ற, தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட சமுதாயத்தாரான துருக்கியருடன் முஸ்லிம்கள் போரிடாத வரை #யுக_முடிவுநாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
📘 நூல் : முஸ்லீம் 5584.
-------------------------------------------------------------------------
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'மக்கா, மதீனா தவிர #தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது ! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான் !'
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
📘 நூல் : புஹாரி 1881.
-------------------------------------------------------------------------

ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரஹ்) அறிவித்தார் :
உக்பா இப்னு ஆமிர்(ரலி) ஹுதைஃபா(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார்.
ஹுதைஃபா(ரலி), ' #தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை 'இது நெருப்பு' என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை 'இது குளிர்ந்த நீர்' என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள்.
📘 நூல் : புஹாரி 3450.
நன்றி : முஹமது ஜமால்  

No comments:

Post a Comment