அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே!!!
ஒருமுறை முழுவதும் படித்துவிட்டு ஆமீன் சொல்லங்கள்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
சுப்ஹனால்லாஹ்... சுப்ஹனால்லாஹ்... சுப்ஹனால்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர்...
அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.
அல்லாஹூம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்) அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.
யா அல்லாஹ்
எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக.......!!!
யா அல்லாஹ்
எங்களது கணவன்,
மனைவி ,குழந்தைகள்,
சகோதர,சகோதரிகள்,
உற்றார் உறவினர்கள் ,
உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக........!!!
யா அல்லாஹ்
நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ,
அறிந்தோ அறியாமலோ,
வேண்டுமென்றோ,
திட்டமிட்டோ,
மறைமுகமாகவோ,
வெளிப்படையாகவோ,
ரகசியமாகவோ,
பகிரங்கமாகவோ,
சிறிதோ பெரிதோ,
எப்பேற்பட்ட பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து
மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக
மறுமை நாளில் எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக........!!!
யா அல்லாஹ்
உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக
கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து
எங்களை தனிமைப்படுத்தி விடாதே........!!!
யா அல்லாஹ்
நாங்கள் கேட்பதற்கு முன்பாக
எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக......!!!
யா அல்லாஹ்
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக......!!!
யா அல்லாஹ்
எங்களது சொல்லாலோ
செயலாலோ
பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக.......!!!
யா அல்லாஹ்
எங்களது உறவுகளை கொண்டோ
செல்வத்தை கொண்டோ
எங்களை சோதித்து விடாதே........!!!
யா அல்லாஹ்
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர , சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக.......!!!
யா அல்லாஹ்
எங்களுக்கும்,
எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து
எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக.....!!!
யா அல்லாஹ்
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும்,
வேதனையிலிருந்தும்,
விபத்துகளிலிருந்தும்,
விஷஜந்துக்களிலிருந்தும்,
அபாயங்களிலிருந்தும்,
இயற்கை சீரழிவிளிருந்தும்,
ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்,
வறுமையிலிருந்தும்,
கடனிலிருந்தும்,
பலாய் முஸீபத்துகளிலிருந்தும்,
எதிர்பாராத மரணத்திலிருந்தும்,
கண் திருஷ்டியிலிருந்தும்,
எங்களை பாதுகாப்பாயாக...!!!
யா அல்லாஹ்
எங்களது
உணவும்,உடையும்,இருப்பிடமும் ஹலாலானவையாக தருவாயாக
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக,
உனக்கு பிரியமானவர்களாக
மாற்றுவாயாக
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும்,
மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தருவாயாக.........!!!
யா அல்லாஹ்
உலக முஃமின்கள் அனைவரையும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பாயாக...!!!
யா அல்லாஹ்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தையும்
எங்களுக்கு மறுமையில் வழங்குவாயாக.......!!!
யா அல்லாஹ்
எங்களை கப்ரின் அதாபிலிருந்தும்,
நரக நெருப்பில் இருந்தும்
பாதுகாத்து
மறுமையில் *ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்* எனும்
மேன்மையான சுவர்க்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக......!!!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!
ஆமீன் ஆமீன் ஆமீன்...
கியாமத் நாளை நோக்கி குழுமம்
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் தினம ஒரு அமல்
بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين
அதிகாலை சுபுஹூ தொழுகைக்கு செல்லும் ஒரு மனிதனை பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். *"படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவனைப்பு அத்தனையும் உதரிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனை பார்த்து இறைவன் வியப்படைந்து வானவர்களிடம் கேட்கிறான்.
வானவர்களே எனது இந்த அடியானை பாருங்கள் !!
படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவணைப்பு அத்தனையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். எதற்காக ?? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு ?? எனது அருள் மீது ஆசை வைத்தா?? எனது தண்டனையை பயந்தா?? பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகிறான்.
*உங்களை சாட்சி வைத்து கூறுகிறேன் : அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சியம் கொடுப்பேன். அவன் எதை பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சியம் அவனுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்* (ஆதாரம்: அஹ்மத்)
ஒருவரையாவது சுபுஹை தவற விடாமல் செய்ய இதனை பகிரவும்.
مولانا مولوى حضرت عالم كي عبدالمجيد يوسفي نندورم كودوانجير ي مدراس ٦٠٣٢٠٢
நன்றி : ஹாஜா ஸ்மார்ட்
No comments:
Post a Comment