அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் புரிந்து ஷஹீத் எனும் நற்பேற்றை அடைபவர்களுக்கான அளப்பெரும் பேறுகளைக் குறித்து, அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அதிகமதிகம் ஆர்வமூட்டிக் கூறியிருக்கின்றார்கள்...!!
ஆதலால், நபித்தோழர்கள் அநேகம் பேர் அன்றாடத் தொழுகையின் பின்னர் பிரார்த்தனையாக கேட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்....!!
இன்னும் சிலரோ தாம் ஷஹீதாக மரணிக்க துஆ செய்யுமாறு அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டுப் பெற்றிருக்கின்றார்கள்....!!
மதீனாவில் ஓர் அன்ஸாரிப் பெண்மணி இருந்தார். அவருடைய பெயர் உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள்....!!
இறையச்சத்தை இதயத்தில் நிரப்பமாக பெற்றிருந்த பெண்மணி. அல்குர்ஆனை அழகிய குரலால் அலங்கரித்து,
கேட்போரின் செவிகளையும், இதயங்களையும் கசிந்துருக வைத்திடுவார்....!!
அம்மணியின் அழகிய ஓதுதலை செவிதாழ்த்தி கேட்கும் ஸஹாபாக்கள் பலர் உண்டு. அதில் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் ஒருவர்....!!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை பெண்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பிலும் அமர்த்தியிருந்தார்கள்.
ஒரு முஅத்தினையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள்.
பத்ர் யுத்தத்திற்கான ஆயத்தப் பணிகளை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் மேற்கொண்டிருந்த தருணம் அது..,,,,
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முன் வந்து நின்றார்கள் உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள்....!!
அல்லாஹ்வின் தூதரே! நானும் இஸ்லாமியப் படையோடு வர ஆசிக்கின்றேன்.
நானும் உங்களோடு வருவதற்கு அனுமதி தாருங்களேன்? எனக்கும் ஷஹாதத்-வீரமரணம் அடையும் நற்பேறு கிடைக்கும் அல்லவா? என்று மிக ஆசையோடு கேட்டார்கள்....!!
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,,,
“நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள், அல்லாஹ் வீட்டில் வைத்தே ஷஹீதாகும் வாய்ப்பை நல்குவான்” என நவின்றார்கள்....!!!
இவ்வாறு ஒரு முறையல்ல இரு முறையல்ல, பகைவர்களுக்கு எதிராக இஸ்லாமியப் படை புறப்படும் ஒவ்வொரு முறையும் நடந்துள்ளது இப்படியான உரையாடல்....!!
வீட்டிலிருக்கும் போதே ஷஹாதத்தா? என மக்கள் ஒருவருக்கொருவர் வியப்போடு கேட்டுக்கொள்ளும் அளவுக்கு பிரபல்யமாகி விட்டிருந்தது....!!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூட உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களைக் காணும் போதெல்லாம் “இதோ! ஷஹீதா வருகிறார்” என்று கூறுவார்கள்...!!
”வாருங்கள் நாம் ஷஹீதாவின் வீடு வரை சற்று போய் வரலாம்” என்று நபித்தோழர்கள் பேசிக்கொள்கிற அளவிற்கு நிலைமை மாறிவிட்டிருந்தது..!!
இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காணும் போதெல்லாம் இவ்வாறு குறிப்பிட்டதிலிருந்து இறைவன்,,,
அப் பெண்மணிக்கு ஷஹாதத்தை உறுதியாக வழங்குவான் என்பதை நபித்தோழர்கள் நம்பினார்கள்....!!
அதை அம் மக்கள் எதிர் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். காலம் கனிந்தது.
உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் அவர்களின் வீட்டில் காஃபிரான ஓர் அடிமையும், ஓர் அடிமைப் பெண்ணும் பணிபுரிந்து வந்தனர்....!!
”எப்போது நான் இறக்கின்றேனோ அப்போதே உங்களின் அடிமைத்தனம் முடிவுக்கு வந்து விடும். நீங்கள் இருவரும் விடுதலையாகி விடுவீர்கள்” என உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் கூறியிருந்தார்கள்....!!!
ஆனால், விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்களே தவிர, அந்தக் காலம் வரும் வரை அவர்கள் காத்திருக்க வில்லை...!!
மாறாக, உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு துணியை கழுத்தில் இறுக்கிக் கொன்று விட்டார்கள்...!!
வீட்டை விட்டும் ஓடியும் விட்டார்கள் அந்த அடிமைகள்.
அதிகாலை நேரம் ஆட்சித் தலைவர்-அமீருல் முஃமினீன் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வழக்கம் போல் உம்மு வரக்கா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீட்டுச் சுவரோரமாக அவர்கள் குர்ஆன் ஓதும் இனிமையைக் கேட்பதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.!
ஆனால், நீண்ட நேரமாகியும் குர்ஆன் ஓதப்படுகிற சப்தம் வரவில்லை. ஏதோ உள்ளுணர்வு உறுத்தவே வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்கின்றார்கள்...!!
இன்னா லில்லாஹ்… உயிரைப் பிரிந்த உடல் உணர்வற்று துணியால் இறுக்கப்பட்டுக் கிடந்தது...!
“வீட்டிலேயே நீங்கள் ஷஹீதாவீர்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையே உரைத்தார்கள்” என உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவர்கள் வாய்விட்டுக் கூறினார்கள்....!!
தப்பியோடிய இரு அடிமைகளையும் கைது செய்து கொண்டு வந்து, கழு மரத்தில் ஏற்றி மரண தண்டனையை நிறைவேற்றினார்கள் கலீஃபா உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்...!!
மதீனாவில் முதன் முதலாக இவர்களுக்குத்தான் கழுமரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
(நூல்: அஹ்மத், பாகம்:6, பக்கம்:405., அபூ தாவூத், , ஹதீஸ் எண்:591.)
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
No comments:
Post a Comment