Friday, June 8, 2018

ஏழை என்பவன் யாரென்றால்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

'என்னுடைய உம்மத்தினரில் ஏழை என்பவன் யாரென்றால், ஒரு மனிதன் கியாமத்து நாளன்று தொழுகை, நோன்பு. சதக்கா போன்ற நற்செயல்களுடன் வருவான். அதேநேரத்தில் எவரையாவது திட்டி இருப்பான்; எவர் மீதாவது அவதூறு கூறியிருப்பான்; யாரையாவது அடித்திருப்பான். இந்த வழக்காளிகள் எல்லாம் அங்கு வந்து, அவனுடைய நற்செயல்களிலிருந்து அவரவர்களுக்குரிய விகிதத்தை அவனிடமிருந்து வசூல் செய்து விடுவார்கள். அவனிடமிருந்து நற்செயல்கள் அனைத்தும் தீர்ந்துவிட்ட பின் இவனால் அநீதி இழைக்கப்பட்டவர்களின் பாவங்களெல்லாம் இவன் மீது போடப்பட்டு அந்தப் பாவக்குவியல்களின் காரணமாக நரகத்திற்குச் சென்றிடுவான். இவன் தான் என் உம்மத்தில் ஏழை என்பதாக ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
தீர்மதீ,அஹமத்,அபூதாவூத்,
நன்றி ; முஹம்மது சஹா - நபிவழி நடந்தால் நரகமில்லை

No comments:

Post a Comment