அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
ஒரு முறை திருநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தொழுகையைப் பற்றிக் கூறும்போது தொழுகையைப் பேணுதலாகத் தொழுதுவருபவருக்கு அது கியாமத்
நாளில் ஒளியாகவும், (விசாரணையின் போது) ஆதாரமாகவும், ஈடேற்றமாகவும் ஆகிவிடும்.
அதைப் பேணுதலாகத் தொழாதவர்களுக்கு அது கியாமத் நாளில் ஒளியாகவோ, (விசாரணையின் போது), ஆதாரமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. மேலும்,
தொழுகையை விட்டவர் கியாமத் நாளில் ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் உபை இப்னு கலப் ஆகிய (கொடியவர்களுடன் இருப்பார் என்று கூறினார்கள்.
அறிவித்தவர்: ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ருரலியல்லாஹு அன்ஹு
நூல்: அஹ்மது
நன்றி : நபி வழி நடந்தால் நரகமில்லை
No comments:
Post a Comment