Friday, June 15, 2018

லைலத்துல் கத்ரு இரவு கூலி

                               அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!

லைலத்துல் கத்ரு இரவு வந்து விட்டால் ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், மலக்குகளில் ஒரு கூட்டத்தாருடன் (பூமிக்கு) வருகை தருகின்றனர். நின்றவர்களாக, உட்கார்ந்தவர்களாக, வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டிருக்கும் அடியார்கள் அனைவருக்காகவும் அருள் வேண்டி (பாவமன்னிப்புக் கேட்டு) துஆச் செய்கின்றனர். பிறகு ஈதுல் ஃபித்ரு-நாளில் அல்லாஹு தஆலா அந்த மலக்களுக்கு முன்னிலையில் (அடியார்களின் வணக்கங்களைப் பற்றிப்) பெருமை பாராட்டிப் பேசுகிறான். (ஏனெனில், அந்த மலக்குகள் மனிதர்களைப் பற்றிக் குறை கூறியிருந்தார்கள்.
அதனால் அவர்களிடம்) 'என்னுடைய மலக்குகளே! தன் வேலையை முடித்துவிட்ட கூலிக்காரருக்கு என்ன கூலி. கொடுப்பது? என்று கேட்கிறான். அப்பொழுது அவர்கள்,
எங்கள் இரட்சகனே! அவருக்குரிய கூலி முழுவதும் நிரப்பமாகக் கொடுக்கப் படவேண்டியது தான்" என்று கூறுகின்றனர். அதற்கு அல்லாஹுதஆலா, 'மலக்குகளே!'
என் அடியார்களாகிய ஆண்களும் பெண்களும், நான் அவர்களின் மீது  கடமையாக்கியவற்றை முழுமையாக நிறைவேற்றி விட்டுப் பிறகு துஆச் செய்தவாறு
ஈத்காஹ்வை நோக்கிச் சப்தமிட்டு (தக்பீர் சொல்லிச்கொண்டு வந்திருக்கின்றனர். என்னுடைய கண்ணியம், என் மகத்துவம், என் தயாளம், என் உயர்வு என் உள்ளத்
அந்தஸ்து ஆகியவற்றின் மீது ஆணையாக அவர்களுடைய துஆக்களை நிச்சயமாக நான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறுகிறான். (பிறகு அந்த அடியார்களை நோக்கி அல்லாஹ்
தஆலா) 'நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் நான் உங்களுடைய பாவங்களை மன்னித்து விட்டேன். இன்னும் உங்கள் குற்றங்களை நன்மைகளாக மாற்றி விட்டேன்" என்று
கூறுகிறான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகத் திரும்பிச் செல்கின்றனர்' என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நூல்: மிஷ்காத்

No comments:

Post a Comment