அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே !!!
ஹஜ்ரத் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "லைலத்துல் கத்ரு நபியவர்களுடைய
காலத்தில் மட்டும் இருக்குமா? அதற்குப் பின்னரும் இருக்குமா?என்று கேட்டேன். 'கியாமத்து நாள் வரை இருக்கும்' என பதிலளித்தார்கள். 'அது ரமலான் மாதத்தின் எந்தப் பகுதியில் இருக்கிறது?' என்று கேட்டேன்.
'முந்தின பத்திலும் கடைசிப் பத்திலும் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு வேறு பேச்சில் ஈடுபட்டு விட்டார்கள். நான் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்து, பத்து தினங்களில் எந்தப் பகுதியில் அது இருக்கிறது?' என்று கேட்டேன். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் கோபம் கொண்டார்கள். அதற்கு முன்போ, பின்போ,என்மீது அவர்கள் அவ்வளவு கோபம் கொண்டதே இல்லை. அதன் பிறகு அல்லாஹுதஆலாவுக்கு (லைலத்துல் கத்ரை வெளிப்படுத்த வேண்டும் என்ற) இந்த நாட்டம் இருந்திருந்தால் அதனைக்
காண்பித்துக் கொடுத்திருக்கமாட்டானா? எனவே, பிந்திய ஏழு இரவுகளில் அதனைத் தேடிக்கொள்ளுங்கள். இதன் பிறகு எதையும் கேட்காதீர்கள்" என்று கூறினார்கள்.
நூல்:- துர்ருல் மன் தூர்'
லைலதுல் கத்ர் இரவில் ஓதும் துஆ
اللهم إنك عفو تحب العفو فاعف عني
அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ
பொருள்:
இறைவா நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'
நூல்கள் : இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)
ரஸ்ஸலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'எந்த மனிதர்
லைலத்துல் கத்ரு இரவில் ஈமானுடனும், நன்மையை நாடியவராகவும் (வணக்கம் செய்ய) நிற்கிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. நூல்: தர்ஃகீப்
நன்றி : முஹம்மது சஹா - நபிவழி நடந்தால் நரகமில்லை
No comments:
Post a Comment