Wednesday, June 6, 2018

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் இறை நிராகரிப்போர் அதிகமானதால் இவ்வுலகை அழிக்க 
அல்லாஹ் நாடினான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்  [பேழை] அமைக்குமாறும் அப்பேழையில்[கப்பல்] இறையச்சமுடையோரையும் நபியே உம்மை நம்பியோரையும் அப்பேழையை கொண்டு காத்துக் கொள்ளவும் உதவும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஏற்ற நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் கப்பல் கட்டும் பணியை துவங்கினார் மக்கள் நபியை வினவ நபி சொன்னாங்க வெள்ளப்பிரழையம் வரப் போகுது உலகத்தை நீரைக் கொண்டு அல்லாஹ் அழிக்கப்போறான் அந்நீரில் இருந்து இது நம்மை காக்கும் பேழை என்றார் நபியை நம்பினவங்க கப்பல் கட்டும் பணியில் சேர்ந்தனர் இச்செய்தி அறிந்து ஒரு மூதாட்டி நபியிடம் வந்து நபியே பேழை உருவானதும் என்னை அழைத்து போங்க அதுவரையில் என் ஒலைகுடிலில் ஒய்வாக இருக்கிறேன் என்றார் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் யும் ஆகட்டும் தாயே நிச்சயமாக உங்களை நான் வந்து அழைத்துப் போகிறேன் என்றார்கள்
[
இன்ஷாஅல்லாஹ் சொல்லமால்]
நம்பாத கூட்டம் எள்ளி நகைத்தனர் எப்படி தெரியுமா? வெள்ளமாம் உலகம் மூடும் அளவுக்கு வருமாம் 
என பலர் நபியை பழித்தனர்
அதில் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் யின் உறவுகளும் உண்டு ஆம் 
அன்னாரின் மனைவியும் மகனும் கூட இறைமறுப்பாளரின் கூட்டத்தில் அல்ஹம்துலுல்லாஹ் கப்பல் 
உருவானது நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்  மற்ற உயிர் ஜிவராசியான ஆடு மாடு கோழி என 
அல்லாஹ்வின் படைப்பினமான அத்தனையிலும் ஒரு ஜோடியை எடுத்து கொண்டாங்க அச்சமயம் 
நச்சினமான பாம்பு தேள் என அனைத்தும் வந்தது நபியே நாங்களும் அல்லாஹ்வின் படைப்பு தானே 
எங்களிலும் ஒருஒரு ஜோடியை எடுக்காதது ஏன் என்றது
நபி சொன்னாங்க நீங்க என் மக்களை தீண்டி விடுவீங்க அதனால் வேண்டாம்
என்றார்கள் அதற்க்கு அந்த நச்சினம் சொன்னது நபியே உங்களுடைய பேரை கொண்டு யார் ஸலவாத்து
சொன்னாலும் அவங்களை எங்க இனம் தீண்டாது என நபிக்கு சத்தியம் செய்தது பிறகுதான் அவைகளையும் ஏற்றிக் 
கொண்டாங்க நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வந்து விட்டனர் கப்பலில் இருக்கும் அனைவர்க்கும்
நபி இட்ட கட்டளை இன்னும் சிறிது நேரத்தில் வெள்ளம் வந்து விடும் அவ்வெள்ளத்தில் இப்பேழை 
உயரும் அச்சமயம் முதல் நீர் வற்றும் வரை யாரும் ஒருவரோடு ஒருவர் இணையக் கூடாது 
[உடல்உறவு] கொள்ளக் கூடாது என்றார் நொடியில் காற்றும் கணமழையும் பொய்ய துவங்கி கடல் 
அலையும் உயரத்து வீசியது நீர் தேங்க துவங்கியது பேழை மிதக்க துவங்கியது இறை நிராகரிப்போர்
அழிந்தனர் எத்தனையே நாள் கழித்து நீர் வற்றத் துவங்கியது நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் க்கு
அப்பத்தான் மூதாட்டியின் நினைவு வர அஸ்தகபிருல்லாஹ் மறுந்திட்டேனே அநியாயம் 
இழைத்திட்டேனே அல்லாஹ்வே உன்னை மறந்து வாக்கு தந்ததினால் என்னை மறக்க செய்தாயே என 
எண்ணி எண்ணி மனம் வருந்தி தன்னோட தவற்றுக்காக அல்லாஹ்விடம் வருந்தினாங்க நபி நூஹ் 
அலைஹிஸ்ஸலாம் பேழை மலைகளின் இடுக்கில் சிக்கியது. நீர் முற்றிலும் வற்றியது பூமியை 
நோக்கி மக்கள் மகிழ்வுடன் மலையிலிருந்து இறங்கி தம்தம் பகுதி நோக்கி நடந்தனர். பூமியில் உள்ள 
அனைத்தும் அழிந்தது
ஆனால் மூதாட்டியின் குடில் மட்டும் அப்படியே இருந்தது இதை கண்ட நபி ஆச்சரியம் கொண்டு 
அக்குடிலை நோக்கி சென்று பார்த்தால் அக்குடிலுக்கு உள்ளே இருந்து மூதாட்டி வெளிவந்து நபியே 
கப்பல் வேலை முடிந்தது நான் வரவா என்றாள் நபிக்கோ வியப்பும் அல்லாஹ்வின் ஆற்றலை எண்ணி 
திகைப்பும் அடைந்தாங்க அல்லாஹ் காக்க நினைத்தால் கடலுக்கடியிலம் நம்மை வைச்சு 
காப்பாற்றுவான் அவன் நாடினால் நடக்காத எதுவும் இல்லை என நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் க்கே நடத்தி காட்டியவன்
ஒவ்வொரு நபிக்கும் தன்னோட ஆற்றலை உணர்த்தியவன் அல்லாஹ் நபிகளுக்கு தந்த 
நியாமத்துகளை நமக்கு தருவான் எப்ப தெரியுமா? முழுவதும் அவனை நம்பும் போது முழுவெற்றி!!!!
ஸலாமூன் அலா நூஹின் fபில் ஆலமீன்
இதை ஒதினால் எந்த நச்சினமும் நம்மை தீண்டாது நூஹ்ஹூ கப்பலில் இருக்கும் போது மக்களுக்கு 
இட்ட கட்டளை உறவு கொள்ளாதிருத்தால் இதை நாய் மீறியது அதனால் தான் நாய் இணைந்தால் 
ஒன்றோடு ஒன்று மாட்டிக் கொள்வது மற்ற எந்த இனத்திற்க்கும் இத்தன்மை இல்லை 
அல்லாஹூஅக்பர்

No comments:

Post a Comment