Monday, July 16, 2018

துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
ஹஸ்பீ ரப்பி ஸல்லலாஹ் !
மாபி ஹல்பி கைருல்லாஹ் !!
நூறு முஹமது ஸல்லலாஹ் !!!
லாயிலாஹா இல்லல்லாஹ் !!!!
ஹஃகு லாயிலாஹா இல்லல்லாஹ் !!!!!
அல்லாஹ் உனக்கே புகழ் எல்லாம்
அரிதாம் நன்றி உனக்கேயாம்
சொல்லும் உயர்ந்த ஸலாத்து ஸலாம்
சுடரை பொழிக்கும் உன் தூதர்
நல்லார் நய்னார் நபிகள் பால்
நன்மை கிளைஞர் தோழர் பால்
அல்லும் பகலும் உண்டாக அனைத்தும்
அளித்து காப்பவனே!!
இறைவா! உனது கருணையினால்
இம்மை மறுமை பேறுதலை 
குறையாது எமக்கு கொடுத்திடுவாய் 
குறைகள் அனைத்தும் தடுத்திடுவாய்
நிறைவாய் உள்ளம் நலம் ஈந்து 
நெஞ்சம் மலர செய்திடுவாய் 
கறையாய் உள்ள பகுதிகளை கழுவி
தூய்மை ஆக்கிடுவாய் 
இம்மை வாழ்க்கை சோதனையில்
இதய பொறுமை தந்திடுவாய்
வெம்மை நெருப்பை விட்டு எம்மை
விலக்கி தடுத்து காத்திடுவாய்!!
சொம்மை பொழியும் சொர்க்கத்தில்
செழிக்கும் இன்பம் ஈந்துடுவாய்
எம்மை நல்லோர் மத்தியிலே
என்றும் இருக்க செய்திடுவாய்
அறிவு கடலாம் கஸ்ஷாலி அடையும்
நெஞ்சின் விரிவை போல்
அறிவின் ஒளியால் எம் நெஞ்சை
அழகாக்கு ரஹ்மானே!!!
பிறையாய் இருக்கும் என்வணக்கம்
திரை போல் வளர உதவிடுவாய்
நிறைவாய் நின்ற அனைவர்க்கும்
நீண்ட ஆயுள் தந்திடுவாய்

இது பாடல் அல்ல 
இது என்னோட துஆ 
அதிகாலை எழுந்து குளித்து விட்டு இதை தான் இறைவனிடம் மனமுறுகி மண்டியிட்டு இதை உருக்கமாக கேட்ப்பேன் அனைவரும் பின்பற்ற கூடிய அற்புதமான வேண்டுதல் [துஆ] 
இறைவனுக்கு பிடித்தது அடியானின் அழுகை சத்தம் ஒரு அடியான் அழுதான் என்றால் இறைவன் நிச்சயமாக அடியானின் வேண்டுதலை நிறைவேற்றுகிறான்.
அடியான் ஒருவன் இறைவனிடம் கேட்டான். 
ஒ இறைவா!! நீ படைத்த படைப்புகளில் எந்த படைப்பை நீ பெரியதாக நினைக்கின்றாய் என்றான்
இறைவன் சொன்னான்  
ஏ மனிதா நீ பார்க்க வில்லையா? இப்பூமீயில் கணமான பாறைகளை வளரச் செய்யுது மிக உயரமாக ஆக்கியுள்ளேன எனறான்.
மீண்டும் மனிதன் கேட்கிறான்
இறைவா! அந்த மலையை விட பெரியது?
இறைவன் சொன்னான் "நெருப்பை" பாறைகளையும் உருக வைக்க கூடியது!!
மீண்டும் மனிதன் கேட்கிறான்
அந்த நெருப்பை விட உயர்ந்தது எது என்றான் ?
இறைவன் சொன்னான் "தண்ணீர்"  நெருப்பை அனைக்க கூடிய ஆற்றல் கொண்டது தண்ணீர்!!
மீண்டும் மனிதன் கேட்டான் 
இறைவா இதைவிட பெரிதாக நீ நினைக்கும் உன் படைப்பு எதுவென்றான்?
இறைவன் சொன்னான் 
நான் உயர்வாக நினைத்து படைக்க பட்ட படைப்பு
தன் தவற்றை நினைத்து உணர்ந்து உருகி என்னிடம் அழுது மன்றாடி நிக்கிறான் பாரு அந்த படைப்பை தான் மிக உயர்ந்த படைப்பாக நினைக்கிறேன் என்றான் இறைவன்!!!

நன்றி : ராபியா பஸரீ

No comments:

Post a Comment