அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
கிருஸ்தவர்கள் கேட்கிறார்கள்:-
இந்தப் பூமியில் இறைத்தூதராக தேர்த்தெடுக்கப்பட்ட எந்த ஒருவரேனும் இறைவனைத் தன் "பிதா" என்றும், தன்னை இறைவனின் "சொந்த மகன்" என்றும் உரிமை பாராட்டியது உண்டா...?????
(இயேசுவைத் தவிர)
இந்த கேள்வியை பதிவிட்டு அவர்களாகவே பெருமையும் பாராட்டிக் கொள்கிறார்கள். அது எப்படிப் பட்ட பெறுமை எனில், ஆதாம் முதற்கொண்டு இயேசு வரை உலகில் தோன்றிய எந்த இறைத்தூதருமே இறைவனைத் தன் "பிதா" (வாப்பா) என்று சொல்லவும் இல்லையாம்...! எந்த இறைத்தூதருமே தன்னை இறைவனின் "சொந்த மகன்" என்று உரிமை கொண்டாடவும் இல்லையாம்.! இறைவனை தன்னுடைய "பிதா" (அப்பா) என்று சொன்னது இயேசு மட்டுமே தானாம், தன்னை இறைவனின் "சொந்த மகன்"
வழிகேட்டுக்கு இந்தளவு பெறுமை தேவைதானா..? நாம் பார்க்க வேண்டியது இதையல்ல. " ஏன் ஆதாம் முதல் இயேசு வரைக்கும் மக்களுக்கு நேர்வழி காட்ட வந்த அனைத்து இறைத்தூதர்களில் எவருமே, இறைவனைப் "பிதா" என்றும் தன்னை இறைவனின் "சொந்த மகன்" என்றும் கூறாமல் விட்டார்கள்..?" இதைத் தான் நாம் பார்க்க வேண்டும். இதைப் பார்பதற்குப் பெயர் தான் அறிவுடமை !
ஆதாம் முதல் மனிதர்:
ஓர் இறைத்தூதர்: ஆதலால்,
"இறைவன் தான் எனது "அப்பா" என்று கூற அனைத்து தகுதிகளும் அவருக்கிருந்தது. தான் இறைவனின்
"சொந்த மகன்" தனக்கு தாயும் இல்லை தகப்பனும் இல்லை, எனவே இறைவன் தான் எனது "பிதா", நான் அவரது "சொந்தப் பிள்ளை" என்று ஆதாம் ஏன் அவரது சந்ததிகளுக்குக் கூறவில்லை...?
நோவா (நூஹ் நபி) ஒரு இறைத்தூதர்
அவரை அவரது சமூகம் ஏற்காததால்
கப்பல் கட்டி தனது சமூகத்தை பாதுகாத்தவர். இறைவனின் அற்புதத்தை ( ஜலப் பிரளயம்) நேரிலேயே கண்ட அவர்களது ஜனங்களிடமாவது, "இறைவன் என் "அப்பா.." நான் அவரது "சொந்த மகன்" என்று போதித்திருக்கலாமே.!
ஏன் நோவா போதிக்க வில்லை..?
அதுவும் இயேசு போதித்தது ஒரு வருஷமா அல்லது இரண்டு வருஷங்களா என்ற சர்ச்சை இருந்து வருகின்றது. ஆனால் நோவா 950 வருஷங்கள் மக்களை இறைவன் பால்
அழைத்துள்ளார்கள். அவ்வளவு காலம் போதித்தும் தன்னை இறைவன் தனது பிதா என்றாரா ? அல்லது தான் இறைவனின் "சொந்த மகன்" என்று உரிமை கோரினாரா..? எதுவுமே இல்லையே..ஏனெனில் இறைவன் சந்ததியை விட்டும் தூய்மையானவன்.
தனக்கு என்று எந்த மகனையும் ஏற்படுத்திக் கொள்ள மாட்டான்..!
மோசே ( மூஸா அலை) இறைத்தூதராக வந்தார்..! இறைவனோடு நேரடியாகவே பேசினார்: அற்புதங்கள்
நிகழ்ந்தினார்: கடலையும் பிழந்து காட்டினார்: தௌராத் வேதத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டார். இப்படி எல்லாம் இருந்தும், தான் இறைவனின்
"சொந்த மகன்", இறைவனே எனது
"பிதா" என்று ஒரு மனிதனுக்காவது போதித்தாரா..? அல்லது தான் இறைவனின் "சொந்த மகன்" என்றாவது உரிமை கொண்டாடினாரா..?
யோனா (யூனுஸ் அலை) மீன் வயிற்றில்
இருக்கும் போதாவது " என் பிதாவே..
என் பிதாவே..உன் "சொந்த மகன்" மீன் வயிற்றில் சிக்கித் தவிக்கிறான்
என்னை காப்பாற்று.." என்றாவது பிரார்த்தித்தாரா ? அல்லது மீன் அவரை கரையில் கக்கிய பிறகாவது
"நான் இறைவனின் சொந்த மகன்"
அதனால் தான் என் பிதா (அப்பா) என்னைக் காப்பாற்றி திரும்பவும் கொண்டு வந்து சேர்த்தான்" என்றாவது தனது சமூகத்திடம் போய் சொல்லலாமே...!அப்படி சொன்னாரா..?
ஆப்ரஹாம் (இப்ராஹிம் அலை) தாவீது (தாவூத் அலை) சாலமான்
(சுலைமான் அலை) இப்படி எவரை எடுத்துக் கொண்டாலும் சரி, தமக்கு உரிமையில்லாத எதையுமே இவர்கள்
போதிக்க வில்லை. பிதா+மகன் என்ற உறவு இவர்களில் எவருக்குமே இருந்ததில்லை. இறைவனுக்கு எந்த ஒரு சந்ததியையுமே கற்பிக்காமல், மக்களின் நேர்வழிக்காக இரவு பகலாக பாடுபட்ட இவர்கள் யாருமே உண்மையாளர்களாக கிருஸ்தவர்களுக்குத் தெரிய வில்லையா..? அல்லது இறைவனுக்கு
மகனேயில்லை என்று ஆதாம் முதல்
இயேசு வரை விசுவாசம் கொண்டு மரணித்த அனைத்து சமுதாய ஆத்மாக்களும் இறைவனின் தன்மையை ( கடவுளுக்கு மகன் உண்டு என்ற கற்பனையை) விளங்காமலேயே மரணித்தார்களா ? ஆப்ரஹாமும் இதை அறியவில்லை..மோசேவும் இதை விளங்கவில்லை. கிருஸ்தவர்கள் மட்டுமே தான் விளங்கியுள்ளார்கள்..!!!
நாளை மறுமையில் ஆதாம் முதல் இயேசு வரை உலக மக்களுக்கு நேர்வழி காட்ட வந்த அனைத்து இறைத்தூதர்களையும் இறைவன் சாட்சி பகர எழுப்புவான். அந்தந்த
சமூகத்தினருக்கு அந்தந்த இறைத்தூதர்களே சான்றாக இருக்கப் போகிறார்கள். இந்நிலையில் இயேசு தவிர, நோவா, ஆப்ரஹாம், யோனா, மோசே உற்பட மற்ற இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று
"எங்கள் இறைவா..! நாம் அனைவருமே உனக்கு விசுவாசமாக இருந்தோம். உன்னுடைய போதனையையே எம்மக்களுக்கும் கூறினோம். இரவு பகலாக மக்களின்
இன்னல்களை சகித்து நீ ஒருவனே இறைவன் என போதித்தோம். ஆனால் நீயோ உன் தன்மையை எங்களிடம் மறைத்து..எம்மை ஏமாற்றி எம்மிடம் கூட சொல்லாமல் உனக்கு நீயே ஒரு "சொந்த மகனை" பெத்துக் கொண்டாயே இது உனக்குத் தகுமா ?
உனக்கு அடுக்குமா..? உனக்கு எதற்கு இறைவா மகன் ? மகனால் உனக்கு என்ன இலாபம் ? பதில் சொல்"
என்று கேட்டால் இறைவன் வெக்கித்து தலை குனிவான் ! வானவர்களும் இது இறைவனின் நியாயமற்ற செயற்பாடு என சாட்சி கூறுவார்களே..! கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த எல்லாம் வல்ல
இறைவனுக்கு அவனது அனைத்து தூதர்களினதும் பலிச்சொல் தேவைதானா..?
இறைவன் அனைத்து தூதர்களுக்கும்
ஒன்றையே கற்பித்தான். ஒன்றையே போதிக்கச் சொன்னான். அது தான் இறைவனின் நேர்வழி..! அதுதான் இறைவனின் மார்க்கம். இதுவே சத்தியமாக இருக்கும் போது, இந்த அனைத்து தூதர்களையும் தூக்கி எறிந்து விட்டு, இறைவன் இயேசுவை மட்டுமே தனது "சொந்த மகனாக" ஆக்கிக் கொண்டான் என்று நம்புவது
மடமையிலும் பெரிய மடமையாகும்.
"வெள்ளாட்டு மத்தையில் ஒரே ஒரு ஆடு மட்டுமே "கருப்பாடு" என்றால் பெறுமை கருப்பாட்டுக்கல்ல..!
இலட்சக்கணக்காக உள்ள அந்த வெள்ளாடுகளுக்குத் தான்..! இயேசுவும் காணாமல் போன ஆடுகளான இஸ்ரவேலர்களுக்கு இறைவனின் மார்க்கத்தைக் கொண்டு நேர்வழி காட்டவே அனுப்பப்பட்டார்.
கருப்பு ஆடாக அவர் வரவில்லை..!
எல்லா இறைத்தூதர்களையும் போல் அவரும் தூய்மையான வெள்ள ஆடாகவே வந்தார். அவரைத் தவறாகப் புரிந்து, அவர் மீது பொய்யை இட்டுக்கட்டி மக்கள் தான் அவரைக் கருப்பு ஆடாக ஆக்கி இப்படி வீணாக பெறுமைப்பட்டும் கொள்கிறார்கள். இது பெறுமையல்ல..சிறுமை !
அனைத்து இறைத்தூதர்களின் வழியை விட்டும், அவர்களது இறை நம்பிக்கை, போதனைகளை விட்டும், அந்தந்த இறைத்தூதர்களின் சமூகத்தின் விசுவாசத்தை விட்டும், கிருஸ்தவம் மட்டுமே இன்று வேறுபடுகிறது என்றால், கிருஸ்தவத்திற்கு எதற்கு "பழைய ஏற்பாடு" ?????
மோசே விசுவாசித்ததும், போதித்ததும், இறைவனை அறிந்தது ஒன்று கிருஸ்தவர்கள் நம்புவதும், அறிந்ததும் இன்னுமொன்று என்றிருந்தால்
பழைய ஏற்பாடு கிருஸ்தவத்திற்கு தேவையே இல்லையே..!
கி.பி இரண்டாவது நூற்றாண்டில் "மார்ச்சியோன்" ( Marcion of Sinope) என்ற கிருஸ்தவ பாதிரியார்
யூத எதிர்ப்பு உணர்ச்சி மிகுந்தவராக இருந்தார். பழைய ஏற்பாடு முழுவதையுமே கிருஸ்தவ உலகம் உதறித் தள்ளிவிட வேண்டுமென்றும்,
இயேசு காலத்திலிருந்து தான் மார்க்கமே தொடங்குவதாக அறிவிக்க வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்யலானார். லூக்காவின் சுவிஷேசம் தான் சரியானது என்றும்
ஏனெனில் பவுலின் கருத்துக்களை அதுதான் பிரதிபலிக்கிறது என்றும் அவர் சொல்லி வந்தார். ஒரு சமயம், இந்தப் பாதிரியாரை கிருஸ்தவ தலைமைப் பீடம் " மதப்பிரஷ்டம்"
செய்து வைத்திருந்தது. இப்படி எல்லாம் கூட நடந்து தான் உள்ளது. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் இறைவனுக்கு சந்ததியோ, இணையோ கற்பிக்காமல் ஒரு வழியில் சென்றார்கள், கிருஸ்தவமோ இயேசுவை இறைவனாக்கி, இறைவனின் சொந்த மகனாகவும் கற்பனை பண்ணி மறு வழியில் சென்கிறது என்றால் பழைய ஏற்பாடு எதற்கு என்று இந்தப் பாதிரியும் சிந்தித்துள்ளார் போலும் !
கிருஸ்தவர்களின் இந்தக் கூற்றினால்
அதாவது:
"இந்தப் பூமியில் இறைத்தூதராக தேர்த்தெடுக்கப்பட்ட எந்த ஒருவரேனும் இறைவனைத் தன் "பிதா" என்றும், தன்னை இறைவனின்
"சொந்த மகன்" என்றும் உரிமை
பராட்டியது உண்டா...?????
(இதன் கருத்து இயேசுவே உரிமை பாராட்டினார்)
என்ற கூற்றின் மூலம்: இந்தக் கூற்றின் அடிப்படையின் மூலம்:,
"ஆப்ரஹாமின் மார்க்கத்தை முஸ்லிம்களே பின்பற்றுகிறார்கள். மோசேவின் வழியில் முஸ்லிம்களே பயணிக்கிறார்கள்..ஏன் சொல்லப் போனால் முன்னைய அனைத்து இறைத்தூதர்களின் வழியிலும் இஸ்லாமே நடைபயிழ்கிறது: இஸ்லாமே மேலோங்குகிறது
என்பதே உறுதிப்படுத்தப்படும் செய்தியாகும்..! இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதற்கு வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை..இன்றைய
கிருஸ்தவமே மிகப்பெரிய ஆதாரம் !!
( இதை முடிந்தவரை share பண்ணுங்கள்..கிருஸ்தவ பாதிரிமார்களும் அனைத்து இறைத்தூதர்களின் வழியை விட்டும் பிரிந்த "வழிகேடு " பெறுமைப்படக்கூடிய ஒன்றா.?"
என்று பார்த்து பெறுமைப்படட்டும்)
("அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.
ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
(அல்குர்ஆன் 9:31 )
நன்றி : FATHIMA ZAMRA -
No comments:
Post a Comment