அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
அல்லாஹூ ஸுப்ஹான ஹுவதஆலாவினால் நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய நேரங்களாக சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். அவைகளாவன...
1. இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி
ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக,,,
“நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு ஒவ்வொரு இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரத்தில் சுவனத்தின் அடியில் இறங்கி கூறுகிறான்,,,,
”#யார்_என்னை அழைக்கிறார்களோ, அவர்களுக்கு பதிலளிப்பேன், யார் என்னிடம் உதவி கோருகிறார்களோ அவர்களுக்கு உதவி புரிவேன்,
யார் என்னிடம் பாவ மன்னிப்பு வேண்டுகிறார்களோ அவர்களை மன்னித்து அருள் புரிவேன்”
(ஸஹீஹ் புஹாரி)
(ஸஹீஹ் புஹாரி)
#ஹஜ்ரத் அம்ருப்னு ஹப்ஸா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்....!!
”#படைத்தவனாம் அல்லாஹ்வுக்கு அடிமைகள் மிக நெருக்கமாக ஆவதற்கு இரவின் கடைசி பாகத்தில் தான் முடியும், எனவே யாரொருவர் அந்நேரத்தை அடைந்து கொண்டாரோ அவர் அல்லாஹ்வை நினைவு கூறட்டும்”
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ”ஒவ்வொரு இரவிலும் குறிப்பிட்ட ஒரு நேரம் உள்ளது. அந்நேரத்தில் எந்தவொரு முஸ்லிமும் தனது ரப்பிடத்தில் இவ்வுலக, மறுஉலக தேவைகளை கேட்டால், அதை அவர் அடைந்து கொள்வார்.
2. #பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில்
ஹஜ்ரத் அனஸ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள், கண்மணியாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதாக,,,
”பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படுவதில்லை”
3. #வெள்ளிக்கிழமைகளில் ஒரு நேரம்...
ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,,,
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி குறிப்பிடும் போது,,,,
”வெள்ளிக்கிழமைகளில் ஒரு நேரம் இருக்கிறது, அவற்றை ஒரு முஸ்லிம் அடையப் பெற்றால், அல்லாஹ்வை தொழுது தனது தேவைகளை முறையிட்டால் நிச்சயமாக பெற்றுக் கொள்வான், மேலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களின் முபாரக்கான கைகளை கொண்டு அக்குறுகிய நேர அளவை காட்டினார்கள் (ஸஹீஹ் புஹாரி)
4. #ஜம்ஜம்_நீரை அருந்தும் போது
ஹஜ்ரத் ஜாபிர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதாக,,,,,
”எத்தேவைக்காக ஜம்ஜம் தண்ணீர் அருந்தப்படுகிறதோ அவை நிறைவேறும்”
5. #தொழுகையின் ஸஜ்தாவின் நிலையில்
ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்,,,,
“மனிதன் தன்னுடைய ரப்பை ஸஜ்தா செய்யும்போது மிகவும் நெருங்குகிறான்,
எனவே இந்த நிலையில் மனப்பூர்வமாக பிராத்தனை செய்து கொள்ளட்டும்”.
6. #கடமையான தொழுகையின் இறுதியில்
ஹஜ்ரத் அபூ உமாமா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள் ”காருண்ய நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது யாரசூல்லாஹ் எந்த துஆ இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்படும் அதற்கு நாயகமவர்கள் இரவின் இறுதியிலும், கடமையான தொழுகைகளின் இறுதியிலும்.” (திர்மிதி)
7. #லைலத்துல்_கத்ர் இரவில்
அல்லாஹ் ஸுப்ஹான ஹுவதஆலா தன் வேத கலாம் அல்குர்ஆனில் ”லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானது” என்பதாக கூறுகிறான்.
புனிதமிக்க ரமழான் மாதத்தில் பிந்திய பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகும். மலக்குமார்கள் அணி அணியாய் பூமியில் இறங்குவார்கள், அல்லாஹ்வின் அருள்மாரி விடியும் வரை பொழிந்து கொண்டிருக்கும்,
சுவனத்து வாயில்கள் திறக்கப்பட்டிருக்கும் இவ்விரவில் அடியார்கள் தனது தேவைகளை ரப்புல் ஆலமீன் அல்லாஹ்விடம் கேட்டுப் பெறலாம்.
கல்பில் நிறைந்த கண்மணி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்,,,
”பாங்கு சொல்லும் நேரத்திலும், மழை பொழியும் நேரத்திலும் கேட்கப்படும் துஆக்கள் நிராகரிக்கப்படுவதில்லை”. மழை பொழியும் நேரம் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும் நேரம், ஆதலால் இந்நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு ஹதீஸில் ”பாங்கு சொல்லும் நேரத்தில் வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு துஆக்கள் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன”.
10. #அநீதி_மற்றும்_அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டோர்
ஹஜ்ரத் தாஹா நூர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம்,
”#அநீதம் இழைக்கப்பட்டவர்களின் துஆக்கள் மீது எச்சரிக்கையுடன் இருங்கள், ஏனெனில் அல்லாஹ்விற்கும் அவர்களுக்குமிடையில் எந்தவித திரையோ மறைப்போ இல்லை (ஸஹீஹ் புஹாரி, முஸ்லிம்)
அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் உமர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,,,
நம் கல்பின் ஒளியாம் முத்து முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதாக,,,
”ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறாத வரை ஒருவரின்,,,
துஆ வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கிக் கொண்டிருக்கும் அதற்கு மேல் எடுத்துச் செல்லப்படாது.
(திர்மிதி)
(திர்மிதி)
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
நன்றி-ஸித்றத்துல் முன்தஹா-துஆக்களின் தொகுப்பு
No comments:
Post a Comment