Thursday, September 27, 2018

தம் இறைவனின் வல்லமையும் மாண்பும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:  
ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.

பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்.
அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.

பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் (இம்முறையும்) ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்துவிட்டேன்" என்று சொல்கிறான்.
ஷஹீஹ் முஸ்லீம் 5322
நன்றி :  அதிரை முஸ்லீம் 

No comments:

Post a Comment