அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இறைவனிடம் நம் துஆ கேட்க்கும் போது நம்முடைய இரு கைகளையும் உயர்த்தி கேட்க வேண்டும் அதற்க்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.இந்த முறையில் துஆ அல்லாஹ்விடம் கேட்டால் இன்ஷா அல்லா அல்லாஹ் கஃபுல் செய்வானாக.
"யா ரஹிமு"
"யா குத்தூஸ்"
இதை தினமும் 1000 தடவை ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் நாடிய நாட்டங்கள் குறைவின்றி நிறைவேறும்.
"யா முஉமினு"
இதை தினமும் 100 தடவை நியயமாக ஓதி வந்தால் மனதை விட்டு அச்சம்,பீதி,திருத்தம் முதலியவை அகன்று போகும்.ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
"யா பாரிஉ"
இதை வெள்ளி இரவுகளில் 101 தடவை ஓதி வந்தால் நல்ல குழந்தைகள் உண்டாகும்.அவனுக்கு மரணம் சுபகாரமானதாக இருக்கும்.
"யா ஸமீஉ"
தனது நாட்டங்கள் நிறைவேற விரும்புவோர் லுகர் தொழுது விட்டு ஒரே சிந்தனைவுடன் 500 தடவை ஓதி துஆ கேட்டால் நம் கேட்ட துஆ நிறைவேறும்.
"யா அத்ளு"
மஃக்ரிப் தொழுத பின் தினமும் 1000 தடவை ஓதி வந்தால் இம்மையின் தீங்குகளை விட்டும் பாதுகாவல் கிடைக்கும்
"யா ஙஃபுரு"
காய்சல் அல்லது உடம்பில் உண்டாகும் பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகளில் அல்லது தடவும் மருந்துகளில் இதை 101 தடவை ஓதி ஊதவும்.
"யா ஷக்குரு"
இதை 41 தடவை தண்ணீரில் ஊதி குடித்தால் பிணிகள் போகும் மனவேதனைகள் நீங்கும்.
"யா முக்கீத்து"
கண்களில் உள்ள கண் சிவப்பு மாறுவதற்க்கு இதை 10 தடவை ஓதி கண்களில் ஊத வேண்டும்.
"யா ரக்கீபு"
பரு,சிரங்கு,கட்டு போன்றவற்றின் மீது 300 தடவை ஓதி ஊதினால் இன்ஷா அல்லாஹ் குனமாகும்.
"யா வாஸிஉ"
தேள் கடித்தவர்களுக்கு இதை 70 தடவை ஓதி ஊதினால் தேள் கடி விஷம் இன்ஷா அல்லாஹ் இறங்கி விடும்.
"யா முஜீபு"
இதை 1000தடவை ஓதி துஆ கேட்டால் நாட்டங்கள் நிறைவேறும்.
"யா ஹக்கிமு"
முயன்ற காரியம் வெற்றி பெறாத நிலையில் இதை முடிந்த அளவு ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.
"யா வதூது"
இதை ஜூம்ஆத் தொழுகைக்கு பின் 1001 தடவை தண்ணீரில் ஓதி ஊதி வழித்தவரிய சிறுவர் சிறமியறுக்கு கொடுத்தால் நேர்வழி படுவர்.
"யா ஷஹீது"
குழந்தை சிறந்த ஒழுக்கமுள்ளதாக விளங்க வேண்டும் என்ற நீய்யத்துடன் அதன் நெற்றியில் கை வைத்து கொண்டு வானத்தை பார்த்தபடி இதை 21 தடவை ஓதினால் இன்ஷா அல்லாஹ் ஒழுக்கமுள்ளதாக வளரும்.
"யா மத்தீனு"
பால் இல்லாத தாய்க்கு பால் சுரக்க இதை 70தடவை ஓதி ஊதினால் பால் சுரக்கும்.
"யா வலிய்யு"
கணவனுக்கு கீழ்ப்படியாத மனைவியின் மீது பல தடவை ஓதி வந்தால் அவள் பணியுடையவள் ஆவாள்.
"யா ஹமீது"
தனது குணம் சிடுசிடுப்பாக இருப்பதை திருத்தி கொள்ள நினைப்பவர்கள் இதை தினமும் மஃக்ரிப் வக்த்தில் 99 தடவை ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் நற்குனம் உண்டாகும்.
"யா முப்திஉ"
கர்பிணியின் சிசு குறைபிரசவமாக இருக்குமோ என்ற அச்சம் உண்டானால் இரவில் ஹைரு நேரத்தில் இதை அவள் கணவன் 96 தடவை ஓதி அவள் வயிற்றில் கலிமா விரலால் தடவவும் அல்லாஹூத் தஆலாவின் அருள் கொண்டு உரிய காலம் வரை குழந்தை பிறப்பலிக்கும்.
"யா ஹையூம்"
இதை தினமும் 70 தடவை ஓதிவந்தால் ஆயுள் நீடிக்கும்.
"யா அஹது"
வீட்டை விட்டு புறப்படும் போது இதை 11 தடவை ஓதி கொண்டு கிளம்பினால் போகும் காரியம் இறைவன் துனையால் வெற்றிகரமாக முடியும்.
"யா அவ்வலு"
குழந்தை பெற விரும்புவோர் இதை 40நாட்கள் தினமும் படுக்கும் போகும் முன் 300 தடவை தொடர்ந்து ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் நற்ச்செய்தி வரும்.
"யா மாலிக்கில் முல்கி"
வறுமையில் அகப்பட்டவன் இதை தினமும் தடவை நியாயமாக ஓதி வந்தால் இறைவன் அவனுக்குடைய வருமையே அகற்றி செல்வம் பொங்கச் செய்வான்.
மீள்பதிவு ஜமாலுதீன் ஜமால்
No comments:
Post a Comment