Tuesday, May 21, 2019

*பாங்கு சொல்லும் வரை ஸஹர் சாப்பிடலாமா?*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
*இன்று பரவலாக பாங்கு சொல்லும் வரை சாப்பிடுவது சகஜமாகிவிட்டது.*
*நம்முடைய நோன்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் அந்நடைமுறையை மாற்றியாக வேண்டும்.*
*ஏனெனில் ஃபஜ்ர் நேரம் வரை சாப்பிடுவது குர்ஆன் மூலம் அனுமதிக்கப் பட்டிருந்தாலும் இன்று ஃபஜ்ர் நேரம் கணிதத்தின் மூலமே அறியப்படுகிறது.*
*தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் தொழுகை நேர அட்டவணையில் கணிதத்தின் மூலம் அறியப்படும் நேரத்தை விட பேணுதலுக்காக ஐந்திலிருந்து எட்டு நிமிடம் வரை அதிகப்படுத்தியே அட்டவணையில் நேரம் குறிக்கப்பட்டிருக்கும்.*
*இப்போது பாங்கு சொல்லும் வரை சாப்பிட்டால் கணிதத்தின் படி ஃபஜ்ர் நேரம் வந்த பிறகும் சாப்பிடுவதாக ஆகிவிடும். இதனால் நோன்பு பாழாக நேரிடும்.*
*உதாரணமாக இன்று கணிதத்தின் படி ஃபஜ்ர் நேரம் 4:32 க்கு வந்தால் தொழுகை நேர அட்டவணையில் 4:37 க்கு வக்த் வருவதாக குறிக்கப்பட்டிருக்கும். பல மஸ்ஜித்களில் சொச்சத்தை விட்டுவிட்டு 4:40 க்கு பாங்கு சொல்லப்படும்.*
*இதன் படி வக்த் வந்து எட்டு நிமிடத்திற்கு பிறகும் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.*
*எனவே பாங்கு சொல்வதற்கு குறைந்தது பத்து நிமிடங்களுக்கு முன்பாக ஸஹரை முடித்துக் கொண்டால் தான் நம்முடைய நோன்பு பாதுகாக்கப்படும்.*
*இருபது நிமிடங்களுக்கு முன்பாக ஸஹரை முடித்துக் கொள்வது பேணுதலாகும்.*

கடைசி நேரத்தில் ஸஹர் செய்வது சிறந்தது, என்பதற்காக கடமைக்கு பங்கம் வந்து விட வேண்டாம்.
*அல்லாஹ் மிக அறிந்தவன்.*
மீள்பதிவு : யூஸுபிய்யா அரபிக் காலேஜ், திண்டுக்கல் 

No comments:

Post a Comment