Saturday, June 29, 2019

தப்சீர் விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
******************
குரானிய தப்சீர் முஸ்லிம்களிடையே அதிகமான செல்வாக்கு மிக்கது.குரானின் பல வசனங்களை தப்சீரின் துணையில்லாமல் பொருள் கொள்ளமுடியாது.அல்லாஹ் என்ன வெளிப்படுத்தியிருக்கிறான் என்பதை இஸ்லாமிய வாழ்வில் ஒவ்வொருவரும் அறிய கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.தப்சீர் என்ற சொல் பசரா என்ற சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.அதன் அர்த்தம் விளக்கம் அல்லது விரிவுரை என்பதாகும்.
தப்சீரை வைத்து தான் சட்டசம்பந்தாமான சிக்கல்களுக்கு விளக்கம் தேடும் முறை முஸ்லிம் அறிஞர்களிடையே அமைந்திருந்தது.முபசிர் என்ற சொல் தப்சீரை குறிக்கிறது.அது போல தவில் என்பது அவ்வால என்ற சொல்லில் இருந்து உருவானதாகும்.இதற்கும் விளக்கம்,வியாக்கியானம் என்ற அர்த்தங்கள் உள்ளது.தப்சீருக்கும்,தவிலுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.
அல்லாஹ் குரானில் மனிதனுக்கு தெளிவான வழிகாட்டுதலை கொடுத்திருக்க தப்சீரி உத்தேசம் தான் என்ன என்ற கேள்வி இருக்கிறது.அல்லாஹ்வை வழிப்பட்டு இஸ்லாமிய வாழ்க்கையை வாழ வழிகாட்டுவதாக தப்சீர் அமைந்திருக்கிறது.அஹ்மத் ஹம்பல் தப்சீர்களை குறித்து எச்சரிக்கிறார்.முன்று விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.தப்சீர்,மலஹிம் என்கிற இறையியல் கதைகள்,மகழி என்கிற போர்க்கதைகள் என்பதாக.இஸ்னத் என்ற சொல்லுக்கு ஆதாரம் என்று அர்த்தம்.முஸ்லிம் அறிஞர்கள் தப்சீர் எப்படி இருக்கவேண்டும் என்ற வரைவிலக்கணத்தை வகுத்திருக்கிறார்கள்.அந்த விதிகள் மீறப்படுமானால் தப்சீரை ஒதுக்கவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.அந்த சில விதிகளைப்பார்ப்போம்.
• அகிதாவை உறுதி கொள்ள செய்வதாக இருக்கவேண்டும்.
• அரபி மொழியும் விதிகளும் சரியாக கடைப்பிடித்திருக்கவேண்டும்
• குரானை குறித்த பாடங்கள் இல்ம் அல் ரிவாயா சரியாக தெரிந்திருக்கவேண்டும்
• சுருக்கமாகவும் சொல்ல தெரிந்திருக்கவேண்டும்
• குரான் தப்சீர் குரானை சொல்லுவதாக இருக்கவேண்டும்
• நபிகள நாயகத்தின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்
• சஹாபாக்களின் அறிவிப்புகளை அறிந்திருக்கவேண்டும்
• தாபியீன்களது அறிவிப்புகளை அறிந்திருக்கவேண்டும்
• மார்க்க வல்லுநர்களிடம் விளக்கம் கேட்டிருக்கவேண்டும்

மிகச்சிறந்த தப்சீர் என்பது குரானை குரானிலிருந்து வியாக்கியானம் செய்வது தான்.அடுத்ததாக சிறந்த தப்சீர் என்பது ஹதீஸ் அடிப்படையில் குரானை விளக்கியதாக இருக்கவேண்டும்.அடுத்ததாக சுன்னாவை பிராதனமாக கொண்டு வியாக்கியானம் செய்ததை சொல்லலாம்.அதற்கு அடுத்தபடியாக சஹாபாக்கள்,தாபியீன்கள் சொன்ன அறிக்கை அடிப்படையிலான குரானிய விளக்கமாகும்.இவ்வாறாக தப்சீர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளது,
தப்சீர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.தப்சீர் பில் ரிவாயா (அறிவிப்பு தொடரை கொண்டது)இதை தப்சீர் பில் மதூர் என்பார்கள்.தப்சீர் பில் ரை (கருத்தை கொண்டது) தப்சீர் பில் திரய (அறிவை கொண்டது) என்று சொல்லுவார்கள்.தப்சீர் பில் இசாரா(அடிக்குறிப்புகளையும்,குறியீடு,சைகைகளை கொண்டது).சில வேளைகளில் முபசிரூன் குரானிய வசனங்களுக்கு விளக்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.அதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன.

• இஸ்னத் குறித்த கருத்தொருமிப்பு இல்லாமலிருந்தால்,
• ஒலிபிறழ்வு வரும் வசனங்களுக்கு வியாக்கியானம் சொல்வதில்லை
• தவறான விளக்கங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும்
• குறிப்பிடதங்கு தப்புகள் நிகழ்வாய்ப்பிருந்தால்
• பிரக்ஞையில்லாத வகையில் விளக்கம் அமைந்திருந்தால்
• அல்லாஹ்விடம் இருந்து வந்த வெளிபாடின் பன்முக அர்த்தங்களை புரியாமலிருந்தால்
• இத்தகைய காரணங்களால் விளக்கம் கொடுக்கமாட்டார்கள்

இப்னு தைமிய்யாவின் பிதா குறித்த தவறான விளக்கங்கள் அல்லாஹ்வின் சொற்களிலோ நபிகளின் சொற்களிலோ அமையாமல் மனோயிச்சையிலான விளக்கம் விவாதங்களை உருவாக்கியது.பனுஇஸ்ராயீல் குறித்த வசங்களுக்கும் பொருள் கொள்வதிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.இபினு அப்பாஸின் கருத்துப்படி தப்சீர் சில அம்சங்களை கொண்டிருக்கும்.அரபுகளுக்கு தப்சீர் செய்வதற்கு அவர்களின் தாய்மொழி உதவியாக இருக்கும்.தவறான விளக்கம் சொன்னால் யாரானாலும் கண்டனத்துக்குரியவர்களே.தப்சீர்கள் அறிஞர்களால் மட்டுமே உருவாக்கப்படவேண்டும்.தப்சீர் சொல்வது இறுதியானதென்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
தப்சீர் கலை அல்லது தப்சீர் இலக்கியம் இபின் அப்பாஸிடமிருந்து ஆரம்பிக்கிறது.சையத் பின் அலியும் தாபியில் சிறந்த தப்சீர் விற்பன்னராவார்.எனினும் தப்சீர் அல் தாபரியே தப்சீரின் முன்னோடி என்றழைக்கப்படுகிறது.ஜமி அல் பயான் ஃபி தப்சீர் அல் குரான் என்ற தாபரியின் நூல் ஹிஜிரி இரண்டாம் நூற்றாண்டில் வெளிவந்ததாகும்.தப்சீர் பில் ரிவாயா என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்நூல் அசாதாரணமானது.அதன்பின்னர் தப்சீர் அல் சமர்கண்டி,தப்சீர் அல் தாலபி,தப்சீர் அல் பகாவி,தப்சீர் இபின் கதீர்,தப்சீர் அல் சுயுக்தி மிகவும் புகழ்மிக்க நூல்களாகும்.சூபித்துவ தப்சீர்களும் பின்னர் புகழ்மிக்கதாக விளங்கியது.ஹகைக் அல் தப்சீர் என்ற சுலைமியின் தப்சீரும் தப்சீர் இ ராபை என்ற பக்கீர் செய்யத் முகமத் ராபி அரபின் நூலும் சூபி தப்சீர்களில் புகழ்மிக்கவையாகும்.ஷியாக்கள் தான் அதிகமான தப்சீர்களை வெளியிட்டுள்ளனர்.தற்காலத்தில் அஹ்மதியாக்கள் தப்சீர்கள் வெளியிட்டுவருகின்றனர்.

தப்சீர் கலை மிகவும் முக்கியமானதாக அமைந்து குரானுக்கும்,ஹதீதுகளுக்கும் ஆழமான விளக்கங்களை கொடுத்துள்ளது.ஹதீதுகள் குறித்த தப்சீர்கள் அதிகம் இல்லையென்றாலும் பத்குல் பாரி புகழ்மிக்கதாகும்.ஆக இஸ்லாமிய அறிவு மரபில் தப்சீரின் பங்கு சாதாரணமல்ல என்பதே ஊர்ஜிதமாகிறது.
தகவல் : Prof.H.Mujeeb Rahman

No comments:

Post a Comment