Saturday, June 29, 2019

பீமா பீவி சையதுன்னிஷா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
16 ம் நூற்றாண்டில் இஸ்லாத்தை பரப்பும் நோக்கத்தோடு சவூதியில் இருந்து ஒரு குடும்பம் பல நாடுகளை கடந்து இந்தியா வந்தடைந்தது நபிகள் நாயகத்தின் குலத்தில் பிறந்த அந்த சூபிக்கள் குடும்பம்  இந்தியா வந்தடைந்தபின் அனைவரும் ஒவ்வொறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று இஸ்லாம் மதத்தை பரப்பினார்கள்.
அந்த குடும்பத்தின் சகோதரிகள் பெயர்கள்...
பீமா பீவி சையதுன்னிஷா
அம்மா ரளியல்லாஹு ,
சைய்யது அலி பாத்திமா ரளியல்லாஹு ,
சுமையா சின்னப்பிள்ளை நாச்சியார் அம்மாள் ,ரளியல்லாஹு ஆவார்கள்.
குஜராத்தில் ஒருவர் மகாராஸ்டிரத்தில் ஒருவர் இவர்கள் பெயர் தெரியவில்லை
சூபி ஞானி பீமா பீவி என்கிற சையதுன்னிஷா ரளியல்லாஹீ,  இவர்கள் திருநெல்வேலி #ஆத்தங்கரை பள்ளிவாசல் சையத்அலி பாத்திமா அவர்களின் கூடபிறந்த அக்கா ஆவார்கள்
பீமா பீவி அம்மா ரளியல்லாஹு  மற்றும் கனவர் அப்துல் கப்பார் இருவரும் இஸ்லாம் மத்தை குஜராத் மக்களிடம் அறிமுகம் செய்துவிட்டு தன் ஒரு தங்கையை தீன்பனிக்காக குஜராத்திலேயே விட்டு விட்டு கேரளா நோக்கி படகில் புரப்பட்டார்கள்.
கேரளம் வந்தடைந்தம் அவர்களுக்கு திருவனந்தபுரம் சூழ்நிலை பிடித்துபோக அங்கையே கரை இறங்கினார்கள் முதலில் அங்கு இருந்த மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அங்கு ஒருவர் கடுமையாக நோய்வாய் பட்டு சிறமபடுவதை கவனித்த அப்துல் கப்பார் அவர்கள் அவரை அரவனித்து மருந்து புகட்டினார்கள்.. தாழ்தப்பட்ட ஜாதியானவரை அரவனித்து மருந்து புகட்டிய செயலை கண்ட மக்கள் அவர்களை வரவேற்று தங்க அனுமதி கொடுத்தார்கள் கணவர் மனைவி இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள் இதை அறிந்து கேரள மக்கள் பலரும் சிகிச்சை பெற்று சென்றனர் பீமா பீவியை மருத்துவச்சி என்ரே மக்கள் அழைக்க தொடங்கினர்
மருத்துவத்தோடு வரும் மக்களுக்கு இஸ்லாத்தையும் கொண்டு சேர்த்தார்கள் கனவர் மனைவி இருவரும் சேர்ந்து பல மீனவர்களை முஸ்லீமாக மாற்றினார்கள்..
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்திவந்தனர் அதர்க்கு சாட்சியாக ஒரு மகன் பிறந்தார் அவர் பெயர் மாஷின் அபுபக்கர். மகனுக்கு 7 வயதாகும் போது தந்தை அப்துல் கப்பார் இறந்து போனார்கள்.
தந்தை இல்லாத மகனை மிகவும் கவனமாக மருத்துவம் சொல்லி கொடுத்து வளர்த்தார்கள் பீமா பீவி மேலும் மகன் மீது அளவுகடந்த பாசம் வைத்தார்கள்...
அவனது 23ம் வயதில்
சாதி மத வெறி பிடித்த மார்தாண்ட வர்மா என்ற கொடுங்கோலன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியை ஏற்றான் அவனது ஆளுகைக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில்தான் பீமா பீவியும் அவரது மகன் ஷஹீத் மாஹின் அபுபக்கர் என்போர்கள் வசித்து வந்தார்கள்
மருத்துவராக பணியாற்றிய மாஹின் அபுபக்கர் அவர்களின் தன்னலமற்ற மருத்துவ சிகிச்சைகள் அக்கடற்கரை பிரதேசத்தில் வசித்து வந்த தாழ்ந்த சாதி மக்கள் என அடையாளப்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது.
மாஹின் மேல் கொண்ட அன்பினாலும் அவரது தன்னலமற்ற மருத்துவ சேவைகளினாலும் ஈர்க்கப்பட்ட அம்மீனவ மக்கள்
மார்தாண்ட வர்மாவினால் சாதீய அடக்குமுறைகளுக்கு ஆளாகி துன்புறுவதில் இருந்து விடுபட நினைத்து தங்களை இசுலாமிய மததில் இணைத்துக்கொண்டு சாதீ கொடுமைகளில் இருந்து விடுபட தொடங்கினார்கள்..
மீனவர்கள் கூட்டம் கூட்டமாக இசுலாம் மதத்திற்கு மாறுகிறார்கள் என்ற செய்தி அறிந்த மார்தாண்ட வர்மா..இது தனது ஆளுமைகளுக்கு ஆபத்தாக முடியும் என்று கருதினான்.
இசுலாமிய மதத்திற்கு மதம் மாறிய அம்மீனவர்களின் மீது தனது அரச படைகளை ஏவினான்.
ஆனால் அம்மீனவர்கள் அரச படைக்களுக்கு அஞ்சாது அரச படைகளுடன் எதிர்த்து போரிட துவங்கினர்..
இந்த சண்டையில் மீனவர்களுடன் சேர்ந்து அரச படைகளை எதிர்கொண்ட மாஹின் அபுபக்கர் வீர மரணம் எய்தினார்.
மகனின் மரணத்தை தாங்கி கொள்ளமுடியாத பீமா பீவி மகன் இறந்த சில நாட்களிலேயே மரணம் அடைந்து விட்டார்.
பீமா பீவி மற்றும் வீர மரணம் அடைந்த மாஹின் அபுபக்கர் ஆகியோர்களின் நினைவுகளை தாங்கி நிற்பது தான் பீமா பள்ளி. அவர்களை நினைவாக ஓர் இசுலாமிய வணக்கதளத்தை உருவாக்கி அதனை சுற்றி அம்மீனவ மக்கள் தங்கள் இருப்பிடத்தையும் அமைத்துக்கொண்டனர்.
அன்றைய மார்தாண்ட வர்மா என்கிற மன்னனின் கொலை வெறியாட்டத்தின் நினைவை சுமந்து கட்டப்பட்டது தான் பீமா பள்ளி.
தகவல் : SSF இபக்கம் 

No comments:

Post a Comment