Wednesday, July 17, 2019

கிப்லா திசை சரி காண

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
வருடத்தில் இரண்டு முறை சூரியன் சரியாக கஅபாவிற்கு மேலே வரும். அப்போது சூரியனை பார்ப்பதும் கஅபாவிற்கு மேலே எழுப்பப்பட்ட கோபுரத்தை பார்ப்பதும் ஒன்றே.
அவ்விரண்டு நாட்களில் ஒன்று ஜூலை 16 அல்லது 17 ஆம் தேதி.
இந்த தேதியில் மக்காவில் சூரியன் உச்சியை அடையும் போது இந்திய நேரப்படி 2:55 pm மணிக்கு ஒவ்வொரு செங்குத்தான பொருளின் நிழலும் துல்லியமாக கிப்லாவை நோக்கி விழும்.
இதன்படி தாருல் உலூம் யூஸுஃபிய்யாவின் மேல் மாடியில் எங்களின் ஆசான் அல்லாமா கீரனூரி (ரஹ்) அவர்களின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டுள்ள நிழல் காட்டும் மிக்யாஸ் மூலம் அல்அஃப்லாக் வல்அவ்காத் பயிலும் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி மூலம் திண்டுக்கல் லின் கிப்லா திசை சரி காணப்பட்டது.
தகவல் : 
Yousufiya arabic college, Dindigul

No comments:

Post a Comment