பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பூனை பற்றிய சில சட்டங்கள்
*நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனையை வைத்து வியாபாரம் செய்வதை தடுத்தார்கள்*
*பூனையின் எச்சில் பட்ட தண்ணீர் அசுத்தமாகாது மேலும் பூனையின் கால் பட்ட தண்ணீரும் அசுத்த மாகாது*
*பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம் அந்த இடம் சுத்தமானதே*
இப்படி இருக்க அரபு நாடுகளில் இன்றும் பெரும்பாலான வீடுகளில் பூனையை வளர்க்கிறார்கள்
*ஒரு சுவாரசியமான செய்தி*
மிக பிரலமான ஸஹாபி அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எப்பொழுதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடவே இருப்பார்கள் *அதே சமயத்தில் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கும் ஒரு பையில் எப்பொழுதும். ஒரு குட்டி ஆண் பூனை வைத்திருப்பார்கள் அந்த பூனை அஙவர்களை விட்டும் எங்கும் செல்லாது சென்றாலும் மீண்டும் அவர்களிடமே வந்து விடும் அந்த பூனையிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள் அதற்க்கு தேவையான உணவும் தண்ணீரும் அவ்வப்பொழுது வழ்ங்குவார்கள்*
*அவர்களிடம் குட்டி பூனை எப்பொழுதும் இருப்பதால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனைகளின் தந்தை என பொருள் வரும் படி அபூ ஹுரைரா என்று அழைத்தார்கள் அவர்களின் அந்த பெயரே கியாம நாள் வரை நிலைத்து விட்டது*
அரபியில் *ஹிர்ரா* என்றால் *ஆண் பூனை* என்று பெயர் *ஹுரைரா* என்றால் *குட்டி ஆண் பூனை* என்று அர்த்தம்
*பூனையை மட்டும் வீட்டில் வளர்க்க அனுமதுயளித்துள்ளார்கள் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை அவ்வாறு வளர்க்கும் பூனையை சுதந்திரமாக விட்டு விட வேண்டும் இதை கட்டிவைத்தோ அல்லது அறையிலோ அல்லலது கூண்டிலோ வைத்து வளர்க்க அனுமதியில்லை அதை வீட்டுக்குள் சுதந்திரமாக எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போக அனுமதிக்க வேண்டும்*
வெளியில் இரை கிடைக்காமல் வீட்டிற்கு வந்தால் உணவும் தண்ணீரும் கொடுக்க வேண்டும்
சரி
*நபி ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் மற்ற பிராணிகளுக்கு கொடுக்காத சலுகையை பிரியத்தை பூனைக்கு மட்டும் ஏன் கொடுத்தார்கள் என்று ஆராயாமல் நாம் சும்மா இருந்து விடுவோம் ஆனால் விஞ்ஞானிகள் சும்மா விடுவார்களா? இதை ஆய்வு செய்தார்கள்*
ஸுப்ஹானல்லாஹ்
*பூனையானது ஒரு வித உறுமலை ( Cat Purr )* *வெளிபடுத்தி கொண்டே இருக்கும்*
*அந்த உறுமலானாது ஒரு வித அதிர்வலைகளை வெளியீடுகிறது அந்த அதிர்வலைகளின் அளவு அதிகபட்சமாக. 20 Herz முதல் 140 Herz வரை இருப்பதாக கூறுகிறார்கள்*
*அந்த அதிர்வலைகளை மனிதன் மீது படும் போது அவனில் எண்ணற்ற மாற்றங்கள் உடலில் ஏற்படுவதாக ஆய்வில் கண்டு பிடித்திருக்கிறார்கள்*
*மனதின் மற்றும் மூளையில் அதிக இருக்கம் அழுத்தம் இருந்தால் அவை நீங்கி விடும்*
*பூனை வளர்ப்பவர்கள் ஹார்ட்அட்டாக் வருவதை விட்டும் 40 சதவீத ஆபத்திலிருந்து பாதுக்காக்க படுகிறார்கள் அதாவது பூனை வளர்ப்பவர்களுங்கு ஹார்ட் அட்டாக் பெரும் பாலும் வருவதில்லை*
*உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால் பூனையின் அதிர்வலை காரணமாக அவை சீக்கிரம் குணமாகும்*
*சதை பிடிப்பு சதை வலுவிழந்து இருந்தால் சதை பிடிப்பு நீங்கி சதை வலுவடையும்*
*மூச்சு திணறல் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் மூச்சு திணறல் நீங்கும்*
*குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூனை வளர்த்தால் அதன் அதிர்வலையின் காரணமாக இரத்த அழுத்தம் சீராகும்*
*பூனை வளர்ப்பவர்களின் எலும்பு வலுவடையும் மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு பூனை யின் அதிவர்லையின் காரணத்தால் எலும்பு சீக்கிரம் இணைந்து குணமாகும்*
*உடலில் ஏதாவது வலி இருந்தால் பூனையை வளர்ப்பதால் வலி குணமாகும்*
என்ன ஆச்சிரியம் பூனையின் அதிர்வலைகள் மிகுந்த மருந்துவ பலனை கொடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
ஆனால் அன்றே நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் மனிதனுக்கு நன்மையை தரக்கூடிய *பூனையை வளரப்பதை ஆதரித்தும் அதை வீட்டில் உள்ளே வருவதை அனுமதித்தும் நமக்கு அருள் புரிந்திருக்கிரார்கள் எனவே பூனையை இன்றிரிலிருந்து நாம் வளர்போம் *பூனையிடமிருந்து பல ஆரோக்கியத்தை பெறுவோம் பூனை நம் வீட்டில் இருப்பது ஒரு டாக்டர் இருப்பதறகு சம்மாகும்*
தகவல் : முஹம்மது அசாம் - அல்லாஹ்வின் உண்மை அடிமைகள்.
No comments:
Post a Comment