Thursday, December 12, 2019

நபிமார்கள் வரலாறு.......ஷீத் (அலை) என்னும் சேது

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!

        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆதியை அறிந்தால் தான் இஸ்லாத்தை அறிய முடியும்......34. நபிமார்கள் வரலாறு.......
ஷீத் (அலை) என்னும் சேது......
நபி ஆதம் (அலை) அவர்களின்..... 135 - வது வயதில் மூன்றாவது மகனாக.... ஷீத் (அலை) அவர்கள் பிறந்தார்கள்..... என்று பைபிள் கூறுகிறது.......
"ஷீத் " என்றால்..... பகரம் அல்லது ஈடு.... அதாவது நபி ஆதம்.... (அலை) இரண்டாம் மகன் ஹாபீல்.. கொலை செய்யப்பட்டதை நினைத்து நினைத்து.... வருந்திய ஆதி பெற்றோர்களுக்கு.... ஹாபீலுக்கு பகரமாக.... ஷீத் (அலை) அவர்களை கொடுத்தான்..... இறைவன். ஆனால் சிரிய.... மொழியில் ஷீத் என்றால் " இறைவனின் அருட் பெருங்கொடை ..... என்று அர்த்தம்..... ஷீத் (அலை) அவர்கள் மூலமே மனித குலத்திற்கு..... இறைவனின் அருட் பெருங் கொடைகள் வழங்கப்பட்டது.....
ஆதம் (அலை) மரணப்படுக்கையின் போது....... ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சுவனத்து கண்ணழகி... நஹ்வா மக்கா என்ற ஹூருள்ஈன் பெண்ணை.... அழைத்துக் கொண்டு வந்து.... ஷீத் (அலை) அவர்களை ஹவ்வா... தனியாக பிரசவித்ததால்..... இவருக்கு பூமியில் மணப்பெண் இல்லாமல் இருந்தது..... .எனவே சுவனத்து கண்ணழகி நஹ்வா மக்காவை சிரியாவில் வாழும் ஷீத் (அலை ) அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.......
ஷீத் மற்றும் நஹ்வா தம்பதியினர்.. அரபி பேசினார்கள் என்றும்...... அவர்கள் ஈன்ற குழந்தையும் அரபி பேசினார்கள் என்றும்... அக்குழந்தையின் வழித்தோன்றலே.... அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்றும் கூறப்படுகிறது......
(இதனால்தானே என்னவோ உலகில் மிகச் சிறந்த...... அழகான பெண்கள் நிறைந்த நாடு.... சிரியா என்று ஒரு கருத்தை படித்ததாக ஞாபகம் )...
இறைவன் ஷீத் (அலை) அவர்களுக்கு நபித்துவத்துவத்தையும்..... ஐம்பது சுஹ்புகளையும் அருளினான்.... .இதன் காரணமாகவே கிரேக்கர்கள் இவர்களை
" ஓரியாயெ அவ்வல்....... என்று கூறுகின்றனர்......

இவர்களுக்கு இருபத்து..... ஒன்பது சுஹ்புகளையும்.... 130 தலைப்புகள் கொண்ட "ஸபூரெ அவ்வல்.... என்ற நூலையும் அருளப்பட்டது என்கிறது மற்றுமோர் வரலாறு......
காபீல் மற்றும்.... அவனது மக்கள் உலகில் அழிச்சாட்டியும்.... புரிந்தமையால்.... அவர்களுடன் ஷீத் ( அலை) அறப்போர் செய்யுமாறு.... இறைவன் கட்டளையிட்டான்.... எனவே சிரியாவில் இருந்து கையில் வாளேந்தி தம் மக்களுடன்..... யமன் நாட்டிற்கு படை எடுத்தனர் ஷீது (அலை)..
வாளெடுத்து படை ....கொண்டு அறப்போர் செய்த இப்போர்தான்.... மனித குல வரலாற்றின் முதல் யுத்தமாகும்...... .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்

யுத்தத்தின் முடிவில் காபீல் சிறைபிடிக்கப்பட்டு..... எப்போதுமே கண்மூடாது.... கதிரவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்படியான கொடும் தண்டனை வழங்கப்பட்டது..,.. இத்தண்டனை... தன் உடன் பிறந்த சகோதரன் ஹாபீவின்... கொலைக்கும் சேர்த்தே வழங்கப்பட்டது..... அதிலேயே
காபீல் இறந்தான்..... அவனுடைய மக்களை சிறைபிடித்து.... அடிமையாக்கப்பட்டனர்......
போரில் காபீலின்.... செல்வங்களை வாரி எடுத்துக் கொண்டு வந்து .....ஆங்காங்கே நகரங்களும்....... இறை ஆலயங்களும் எழுப்பப்பட்டன.....

ஷீது (அலை) அவர்கள்.... இலங்கைக்கும் இந்தியாவிற்கும்...... இடையே ஆட்சி புரிந்தார்கள் என்றும் ஒரு வரலாறு பேசுகிறது....... ஆதம் (அலை) இறங்கிய மலை காபீல்..... அவர்அடங்கப் பெற்ற இடம் இராமேஸ்வரம்..... அருகே ஆதம் பாலம்.... அதுவே சேது சமுத்திர பாலம் என்றெல்லாம்.... வரலாற்று ரீதியாகப் பேசப்படுகிறது....... கொஞ்சம் சேது கால்வாய் திட்டம் பற்றி......
சேது சமுத்திர.... கால்வாய்த் திட்டம்....
பாக் நீரிணைப்பு.... மற்றும் இராமர் பாலம்(ஆதாம் பாலம், Adam's Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி...... கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம்........
இத்திட்டம் நிறைவேறும்பொழுது.... இக்கால்வாய் வழியாக... செல்லக்கூடிய அளவும் வேகமும்..... கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து....
இலங்கையைச் சுற்றாமல்..... சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்......

300 மீ அகலமும்..... 12 மீ ஆழமும்.... 167 கி.மீ நீளமும் கொண்டதாக..... இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது......
ஷீது என்றாலே " பகரம்......அல்லது ஈடு . இந்தியப் பெருங்கடலில் இருந்து.... கப்பல்கள் இலங்கை சுற்றாமல்.... சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை சுருக்கமாக அடைவது.... என்பது சுற்றி வந்ததற்கு பகரமாக உள்ளதானே.....
ஷீது என்றால்.... இறைவனின் அருட் பெருங் கொடை ..... என்ற அர்த்தமும் உள்ளது....... அந்த பெருங்கொடை சேது சமுத்திரம் கால்வாய் திட்டம்.... இறைவனின் அருட் பெருங்கொடை தானே.......
தகவல் : Mohamed Musadique

No comments:

Post a Comment